ADGP கல்பனா நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், “அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் திட்டமிடப்பட்ட தீ வைப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை” என்று, தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக ADGP கல்பனா நாயக், “தான் பணியில் இருந்தபோது, என்னை கொலை செய்யப்பார்த்தார்கள்” என்று, பகிரங்கமான குற்றச்சாட்டை பேசியது, ஒட்டுமொத்த போலீசார் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காவல் துறையில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளன.
கூடவே, தடவியல் துறை தீயணைப்புத்துறை, மின் துறை சார்ந்த நபர்கள் இடமிருந்து முறையாக அறிக்கை பெறப்பட்டு உள்ளது.
முக்கியமாக, சம்பவம் நடந்த அன்றே, தீயணைப்புத்துறை, தடைவிகள் துறை மற்றும் மின் துறை சார்ந்த தொடர்புடைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், “பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கூடிய பொருட்கள் எதுவும், இந்த தீ விபத்தில் இல்லை என்பது, வேதியியல் பூர்வமான ஆய்வில் தெரியவந்து உள்ளதாக” தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, “ADGP கல்பனா நாயக் குற்றச்சாட்டு உண்மை இல்லை” என்று, தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணைய விளக்கம் அளித்து உள்ளது.
அதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு 750 உதவி ஆய்வாளர் தேர்வு பட்டியல் ஜனவரி 30 இல் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, தேர்வர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சீருடை பணியாளர் தேர்வாணையம் மீண்டும் இறுதிப் பட்டியலை அக்டோபர் 3 ஆம் தேதி வெளியிட்டது.
ஏடிஜிபி கல்பனா நாயக் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் விதிமீறல் தொடர்பாக சுட்டிக்காட்டி கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்து உள்ளது குறிப்பிட்டு உள்ளது.