Mon. Jun 30th, 2025

சசிகுமாரின் “மை லார்ட்” படத்துக்கு எதிர்ப்பு

நடிகர் சசிகுமாரின் “மை லார்ட்” படத்துக்கு புதிய சிக்கில் எழுந்து உள்ளது.

ராஜீ முருகன் FILM, நீரவ்ஷா ஷான் ரோல்டன் – தயாரிப்பில் , ஜெயந்தி அம்பேத் குமார் தயாரிப்பில் இயக்குனர் சசிகுமார் நடித்து வரும் படம் “மை லார்ட்”.

இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில், இப்படத்தின் போஸ்டரில் பெண்களை அவமதிக்கும் விதமாக நடிகர் சசிகுமார் புகை பிடிப்பது போலவும்,, கூடவே படத்தின் நாயகியான நடிகையும் புகைப்பிடிப்பது போலவும் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இதனால், நாடு முழுவதுமே “புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு” என்று, வசனம் இருந்தால் மட்டும் போதாது என்றும், அதை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சினிமா துறையில் எந்த ஒரு நடிகரும் குறிப்பாக நடிகர் விஜய், அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் வரிசையில் தற்போது சசிகுமார் அவர்களும் பெண்களை அவமதித்து வருவதாகவும், இதனை ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சமூக ஆர்வலர் RTI செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.

இதன் காரணமாக, சமூக ஆர்வலர் RTI செல்வம், “மை லார்ட்” திரைப்பட போஸ்டரை தடை விதிக்க வேண்டும் என்றும், சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் நடித்திருக்கும் நடிகர் சசிகுமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலிறுத்தி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளதாகவும் சமூக ஆர்வலர் RTI செல்வம், தெரிவித்து உள்ளார். இச்சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *