Jealous friends signs in tamil | பொறாமை என்பது மனிதர்களுக்கே இருக்கும் இயல்பான குணங்களில் ஒன்று. அதனால், இந்த பொறாமை என்பது எவர் மீதும் எப்படியாப்பட்ட உறவுகளுக்கு இடையிலும் வரும். இன்றைக்கு ஒருவர் நன்றாக இருந்தால் மற்றொருவருக்கு பிடிக்காது. அதேநிலை தான் நட்பிற்கும் பொருந்தும். இருப்பினும், அனைவரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், சில அறிகுறிகளை கவனிப்பதன் மூலம் உங்க நண்பர் உங்களை பார்த்து பொறாமைப்படுகிறார் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.
உங்க நண்பர் உங்களை பார்த்து பொறாமைப்படுகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்:
உங்களுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது, உங்க நண்பர் உங்களை விட்டு எந்த காரணமும் இல்லாமல் விலகிச் செல்வது அல்லது உங்களிடம் பேசவே விருப்பம் இல்லாதது போல் நடந்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் உங்களின் மீது அவருக்கு பொறாமை இருக்கிறது என்று அர்த்தம். எனவே, இந்த அறிகுறி உங்க நண்பரிடம் இருக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள்.
உங்களுடைய மகிழ்ச்சியான தருணத்தில் உங்களுடன் இல்லாமல், நீங்க கஷ்டபடும்போது ஆறுதல் கூறுவது போல் உங்களையே குறைக்கூறுவது, கிண்டல் செல்வது, மற்றவர்களிடம் இருந்து உங்களை தனிமைப்படுத்த முயற்சிப்பது போன்றவற்றை செய்கிறார் என்றால் உங்களை பார்த்து பொறாமைப்படுகிறார் என்று அர்த்தம்.
நீங்கள் ஏதாவது புதிய முயற்சிகளில் இறங்கும்போது, எதிர்மறையாக பேசுவது, உங்க முடிவுகளை விமர்சிப்பது, புதிய முயற்சிகளை செய்யவிடாமல் உங்களை பயமுறுத்துவது போன்றவற்றை செய்தால் உங்கள் நண்பருக்கு உங்கள் மீது பொறாமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று அர்த்தம்.
எந்த செயல் செய்தாலும் உங்களைப்போலவே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உதாரணமாக, ஆடை, அணிகலன், பழக்கவழக்கம், பேச்சு, நடை, செயல் போன்றவற்றை உங்களை பார்த்து அப்படியே காப்பி அடிக்கிறார் என்றார் அப்பட்டமாக உங்களை பார்த்து பொறாமைப்படுகிறார் என்று அர்த்தம்.