“சினிமாவில் சாதித்த உழைப்போடும், அர்ப்பணிப்போடும் அரசியலிலும் பயணித்து நடிகர் விஜய் வெற்றி பெற வேண்டும்” என்று, திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு “சுய சக்தி-2024” எனும் விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு கலந்துகொண்டு, சாதனையாளர் விருது வழங்கினார்.
அப்போது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள், திரையில் சில தலைப்புகள் குறித்து கனிமொழியின் மனதில் தோன்றுவது குறித்து கூறுமாறு கோரிக்கை வைத்தனர்.
அப்போது, “2026” எனும் தலைப்பிற்கு, “தேர்தல், திமுக வெற்றி” என்று பதில் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, “பண்பு” எனும் தலைப்பில், இடம் பெற்றிருந்த ஜெயலலிதா புகைப்படத்திற்கு, “எதற்கும் அஞ்சாத பண்பு” என்று பதில் அளித்தார்.
“பாராட்டு” எனும் தலைப்பில் இடம் பெற்றிருந்த, பிரதமர் மோடி படத்திற்கு, “தமிழகத்திற்கு வழங்க வேண்டியநிதி வழங்கினால் பாராட்டு” என்று, பதில் அளித்தார்.
“பாசம்” எனும் தலைப்பில் இடம்பெற்று இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்திற்கு, “பாசமான அண்ணன்” என்று, பதில் அளித்தார்.
“எச்சரிக்கை” எனும் தலைப்பில் இடம் பெற்றிருந்த உதயநிதி படத்திற்கு, விளக்கம் அளித்த கனிமொழி, “அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எதிர்க்கட்சிகள்” என்று, பதில் அளித்தார்.
“காதல்” எனும் தலைப்பில் இடம் பெற்று இருந்த தூத்துக்குடி படத்திற்கு, “பழகுவதற்கு அன்பான மனிதர்கள்” என்று, பதில் அளித்தார்.
“அறிவுரை” எனும் தலைப்பின் கீழே விஜய்க்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?” என்று தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விக்கு,
“நடிகர் விஜய், சிறு வயதில் இருந்தே விஜய் குடும்பத்துடன் பழக்கம் உள்ளது. மிக பெரிய ஸ்டாராக இருக்கிறார். அதே தெளிவோடும் உழைப்போடும் அரசியலிலும் பயணிக்க வேண்டும்” என்று, திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்தினார்.