தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட கால காதலனான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
மேலும், பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா உள்ளிட்ட முன்னணி சினிமா நட்சத்திரங்களும் கலந்துக்கொண்டனர். இவர்களின் திருமணத்தில் சிறப்பு என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது.
அதாவது, கீர்த்தி சுரேஷ் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் டிசம்பர் 12 ஆம் தேதி காலை இந்து முறைப்படியும், ஆண்டனி கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதே நாள் மாலை வேளையில் கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடந்துள்ளது. தற்போது, சமூக வலைத்தளங்களில் இந்த இரண்டு திருமணத்தின் புகைப்படங்களும் வைரலாகப் பரவி வருகின்றன.