Mon. Jun 30th, 2025

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் சிறுநீரகம் தொடர்பான ஒரு பிரச்சனை தான் இந்த ‘சிறுநீரகக் கல்’. இருப்பினும், பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த பிரச்சனை அடிக்கடி வரும். பொதுவாக, சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றி அதை சிறுநீரோடு வெளியேற்றும். ஒருவேளை இரத்தத்தில் அதிகப்படியான கழிவுகள் இருந்தால், உடல் போதுமான சிறுநீரை உற்பத்தி செய்யாது. ​​​

இதனால் சிறுநீரகங்களில் படிகங்கள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த படிகங்கள் மற்ற கழிவுகள் மற்றும் இரசாயனங்களை கவர்ந்து ஒரு திடமான பொருளை (சிறுநீரக கல்) உருவாக்குகின்றன. இது உடலில் தாங்க முடியாத அளவிற்கு வலியை ஏற்படுத்தக்கூடியது. இந்த கிட்னி ஸ்டோன் வர என்ன காரணம்? என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

கிட்னி ஸ்டோன் ஏற்பட காரணம் என்ன?

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக கற்கள் இருந்தால், உங்களுக்கும் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் இருந்து குணமாகி இருந்தாலும், மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரக கற்கள் உருவாகும். மேலும், வெப்பமான காலநிலையில் வசிப்பவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்களுக்கு சிறுநீரகக் கல் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது.

அதேபோல், அடிக்கடி சிறுநீரை அடிக்கி வைப்பதாலும் கல் உருவாகும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனை வரலாம். அதாவது, நீரிழிவு நோயிக்காக தினமும் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் எதிர்ப்பு, சிறுநீரில் கால்சியம் அளவை உயர்த்தி சிறுநீரக கற்களை உருவாக்குகிறது. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும், உணவுமுறை சிறுநீரக கற்களை உருவாக்கும்.

அவற்றில் முக்கியமானது சர்க்கரை, உப்பு அதிகளவு எடுத்துக்கொள்வது. இறைச்சி, முட்டை மற்றும் கடல் உணவுகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் அதிகளவு எடுத்துக் கொள்வது, உடலில் கால்சியம் மற்றும் யூரிக் அமிலத்தை உருவாக்கலாம். இதுவும் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு மற்றொரு காரணம்.

உடல் பருமனும் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக்கூடியது. அதாவது, உடல் பருமன் சிறுநீரில் உள்ள அமில அளவை மாற்றி, கல் உருவாவதற்கு வழிவகுக்கும். ​பாலிசிஸ்டிக் என்று சொல்லக்கூடிய சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு கல் உருவாவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிக அளவு வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ், வைட்டமின் சி உணவுகள் தொடர்ந்து எடுத்துக்கொள்வது சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *