இரவு தூங்கும்போது எல்லோருக்குமே கனவு வருவது வழக்கம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். அவற்றில் சில கனவுகள் நமக்கு ஞாபகம் இருக்கும், சில கனவுகள் முழுவதுமாக மறந்துவிடும். அப்படி முழுவதுமாக மறந்துவிட்டாலும் கூட, அந்த கனவில் வந்த நிகழ்வுகள் நமக்கு நிஜத்தில் நடப்பது போன்று தோன்றும்.
அதுமட்டுமல்லாமல், நமக்கு வரும் கனவுகள் சில நேரங்களில் பலன்கள் தரும் என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கனவும் ஏதோ ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்தும் விதமாக இருக்கும். அதாவது, எதிர்காலத்தில் நமக்கு ஏதாவது பிரச்சனை வரப்போகிறது என்பதைக் கூட சில கனவுகள் நமக்கு உணர்த்துமாம். அந்த வகையில், இந்த கட்டுரையில் நாம் குலதெய்வத்தை கனவில் கண்டால் நமக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
குலதெய்வம் கனவில் வந்தால்..
நமக்கு இஷ்ட தெய்வங்கள் பல இருந்தாலும், நம்முடைய குலதெய்வத்திற்கு பிறகு தான் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், நம்முடைய வாழ்க்கையில் நிகழும் பல விஷயங்களில் கண் இமைக்கும் நொடில் உயிர் பிழைத்தேன் என்று சொல்லும் போதெல்லாம், நம் குலதெய்வம் தான் நம்மை காக்கிறது. எனவே, குலதெய்வத்தையும், குலதெய்வ வழிபாட்டையும் எக்காரணத்திற்காகவும் மறந்துவிடக் கூடாது.
அதன் படி, உங்களுடைய கனவில் திடீரென்று குலதெய்வம் வந்தது போல் இருந்தால், உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போகிறது என்று அர்த்தமாம். அதுமட்டுமல்லாமல், வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இதுவரை மந்தமாக இருந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக தடைப்பட்ட காரியம் நல்ல முறையில் நடந்து முடியும்.
அதேபோல், உங்கள் கனவில் குலதெய்வ கோவில் வந்தால் நீங்கள் மனதில் நினைத்த காரியம் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும் என்பதை குறிக்கிறது. சில சமயங்களில், உங்க குலதெய்வத்தை நீங்க சரியாக வழிபாடு செய்யவில்லை என்பதை மறைமுகமாக கனவில் வந்து உங்களுக்கு உணர்த்துகிறது என்று அர்த்தம். எனவே, கனவில் குலதெய்வம் வந்தாலோ அல்லது குலதெய்வ கோவில் வந்தாலோ முடிந்தவரை அதே வாரத்தில் உங்க குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்வது இரட்டிப்பு பலன்களை தரும்.