சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் வளாகத்தில் வழக்கறிஞர்கள் விஜயகுமார் மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இருவருக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், அவர்கள் இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு முதலில் ஏற்பட்டு உள்ளது.
அதாவது, மதியம் 1.15 மணி அளவில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றி விடுவதற்கான பேச்சு வார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று உள்ளது.
அந்த நேரம் பார்த்து, வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும், வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு, முதலில் வாய் சண்டையாக மூண்டு உள்ளது.
பிறகு, அந்த வாய் சண்டை அதிகரிக்கவே, 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இரு தரப்பிலும் அங்கு கூடிய நிலையில், கைகளாலும் அங்கு இருந்த நாற்காலிகளாலும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.
இது குறித்து, சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் உதவியாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு சண்டையை தடுத்து நிறுத்தினர். இந்த தாக்குதலில், வழக்கறிஞர்கள் விஜய்குமார், விமல், உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, எழும்பூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை உடைத்து தாக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.