உனக்கு நேர்ந்த அனைத்தையும், நீயே வருந்தலாம் அல்லது நடந்ததை பரிசாகக் கருதலாம்..
வலி எப்போதும் கண்ணீரில் மட்டும் இருப்பதில்லை..
சில நேரங்களில் சிரிப்பிலும்
மறைந்து இருக்கும்..!
உண்மையாக இருப்பவர்கள், ஒரு ஓரமாகத் தான் இருக்கிறார்கள்.
வாழ்க்கையிலும், மற்றவர்கள் மனதிலும்!
மனதில்பட்டதை, வெளிப்படையாக பேசுபவர்களிடமிருந்து,
இந்த உலகமும், உறவும் சற்று விலகியே நிற்கிறது உண்மைதானே! இப்படியான நிலைகள்..
இதையும் மீறி; ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், அறிவோ, அழகோ, பணமோ, தேவையில்லை. அக்கறை இருந்தால் போதும்!
அது வளர, வாய்ப்பாகவோ அல்லது உங்களை வளரவிடாமல் தடுப்பதற்கான தடையாகவோ இருக்கிறது. நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் உங்களை நம்பினால், “எப்படி வாழ வேண்டும்?” என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் நிகர மதிப்பை இரட்டிப்பாக்க, உங்கள் சுய மதிப்பை இரட்டிப்பாக்குங்கள். மந்திரம் எளிமையான விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்து, நீண்ட காலம் உங்கள் சுயமரியாதையை (சுய மதிப்பை) இரட்டிப்பாக்கும் அதிசயத்தைத் தூண்டிவிடும். மேலும் நீங்கள் உங்கள் சுய உருவத்தின் உயரத்தை மீறுவீர்கள்.
மற்றவர்களின் போதனைகளில் மயங்கி நம்மில் பெரும்பாலோர் உறக்கத்தில் இருப்பதால், நமக்கு சவால்கள் தேவைப்படுகின்றன. அரசியல்வாதிகளாலும் உபதேசிக்கப்பட்டு, மயக்கத்தில் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம். உறக்கத்தில் இருப்பதுகூட நமக்கு தெரியவில்லை; உறக்கநிலை தான் இயல்பானது என்ற மயக்கத்தில் இருக்கிறோம்.
சுய ஒளியாக இருக்க வேண்டுமென்று விழைந்தால், இவைகளிலிருந்து எல்லாம் விடுதலை பெறலாம். ‘தான்’ அற்ற நிலை ஒருவரிடம் உள்ளபோது மட்டுமே ஒருவர் தனக்கே சுய ஒளியாக இருக்க முடியும். அந்த ஒளியானது என்றும் நிலைத்திருக்கும்; என்றும் தொடர்ந்து வரும்; அளவு கடந்த ஒளியாக திகழும்.
“எனக்குத் தெரியும், எனக்கு அனுபவம் உண்டு, அதை மறுக்க முடியாது; இது எனது அனுபவம், நான் அதை முழுமையாக நம்பியிருக்கிறேன்” – இவை அந்த அறிவின் அறிகுறிகள்.
ஆனால், நீங்கள் அதை கடந்து செல்லும்போது, அதை நீங்கள் பகுப்பாய்வு செய்யும்போது, அதை நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் பார்க்கும்போது, ”எனக்குத் தெரியும்” என்பது உங்களையும் என்னையும் பிரிக்கும் மற்றொரு சுவர் என்பது புரியவரும்.
அந்த சுவருக்குப் பின்னால் நீங்கள் தஞ்சம் அடைகிறீர்கள்; ஆறுதலையும் பாதுகாப்பையும் தேடுகிறீர்கள்.
ஆகவே, ஒரு மனது எவ்வளவு அதிகமாக அறிவால் சுமையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதனுடைய புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருக்கும்.
இதுதான் வாழ்வியல்!
– கே. எஸ். இராதாகிருஷ்ணன்