காதல் மெசேஜ்களால் பெண் Police-க்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் IPS அதிகாரி சஸ்பெண்டு ஆன பின்னணி என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் போக்குவரத்து காவல் துறை இணை ஆணையர் மகேஷ் குமார் தான், பெண் Police-க்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தற்போது சஸ்பெண்டு ஆகி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
சென்னை போக்குவரத்து காவல்துறையில் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்த மகேஷ் குமார் மீது, பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை DGP சங்கர் ஜிவாலிடம் கொடுத்து உள்ளார். சமூக வலைதளம் மூலம், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாவும், பரிசு பொருட்கள் கொடுத்ததாகவும் கூறி அந்த பெண் போலீஸ் புகார் அளித்து உள்ளார்.
முக்கியமாக, இணை ஆணையர் மகேஷ் குமார் அளித்த பரிசு பொருட்கள் மற்றும் சில ஆதாரங்களுடனும் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், அளித்த புகார் விசாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, விசாகா கமிட்டியில் இடம் பெற்றுள்ள டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் மேலும் ஒரு பெண் போலீஸ்-க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பணிபுரியும் இடத்திற்கு சென்று பெண் Police-க்கு, IPS அதிகாரி மகேஷ்குமார் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
பெண் காவலர்கள் 2 பேருக்கும் தொடர்ந்து மாறி மாறி இரவுப் பணி கொடுத்து பணிபுரியும் இடத்திற்கு சென்று மகேஷ்குமார் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள டிஜிபி சங்கர் ஜிவால் மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து மாநில உள்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த பாலியல் புகார் தொடர்பாக தமிழக காவல் துறையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டில் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தின் படி விசாகா கமிட்டி தங்களது விசாரணை நடத்தி நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.