“நமக்கு வாய்ப்பே இல்லை, சும்மா வேடிக்கை பார்க்க வந்தேன்” என்று, நடிகர் மன்சூர் அலிகான் சலிப்புடன் பேசியது வைரலாகி வருகிறது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக களம் காண்டார் நடிகர் மன்சூர் அலிகான். அதன்படி, இன்று வாக்கு எண்ணும் மையத்தில் வருகை புரிந்த அவர், வாக்கு எண்ணும் மையங்களில் பார்வையிட்டு வந்தார். அப்பொழுது, அவர் பேசும் போது “ஐயா ஓட்டுக்கு நான் பணம் கொடுக்கவில்லை. பரிசு கொடுக்கவில்லை. ஆகையால், நமக்கு வெற்றிக்கு வாய்ப்பு இல்லை” என்று சற்று சலிப்புடன் நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். இது, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதே போல், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றியை வேலூர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆந்திர மாநில தெலுகு தேச கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில், திருப்பதி மற்றும் சித்தூர் செல்லும் பேருந்துகளில் பயணிகளுக்கு சித்தூர் சி.கே பாபு ஆதரவாளர் காட்பாடி ஆர்.எஸ். சாம்ரௌசர் பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். ஆந்திரா சட்டப் பேரவை தேர்தலில் தெலுகு தேச கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, வேலூரில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.