இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 108 புதிய அறிவிப்புகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
அதில் மிக முக்கியமான 25 அறிவிப்புகளை பார்க்கலாம்..
– ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17,000 திருக்கோயில்களின் வைப்புத் தொகை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாண்டு 1000. நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.110 கோடி அரசு நிதியாக வழங்கப்படும். ஏற்கனவே, 17,000 திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகை ரூ.1000/- இவ்வாண்டு கூடுதலாக சேர்க்கப்படும் 1000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்படும்.
– ஒருகால பூைசத் திட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக தலா ரூ.10,000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
– கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் நகர், உக்கடம், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்யப்படும்.
– தென்காசி மாவட்டம் மற்றும் வட்டம், இலஞ்சி அருள்மிகு இலஞ்சிகுமாரர் திருக்கோயிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்யப்படும்.
– திருச்சி மாவட்டம், திருச்சி நகர், கல்லுக்குழி, அருள்மிகு ஆஞ்சேநயர் திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்படும்.
– திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்படும்.
– திருச்சி மாவட்டம், மணப்பாைற வட்டம், அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்படும்.
– தஞ்சாவூர் மாவட்டம், கும்பேகாணம் வட்டம், திருநாேகசுவரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்படும்.
– சென்னை மாவட்டம், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் யாைன வாகனத்திற்கு வெள்ளித்தகடு போர்த்தும் பணி மேற்கொள்ளப்படும்.
– சென்னை மாவட்டம், வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் மூலவர் சன்னதி மரக்கதவில் வெள்ளித் தகடு போர்த்தும் திருப்பணி ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
– கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.8 கோடியிலிருந்து ரூ.13 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
– புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 225 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது ஆண்டுேதாறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.5 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
– பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 11. திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் மதுரை மாவட்டம், அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
– சென்னை, திருவான்மியூர், அருள்மிகு பாம்பன் குமரகுருதாசர் திருக்கோயிலில் தற்போது அன்னதானத் திட்டத்தின் கீழ் திங்கள், புதன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாளொன்றுக்கு 300 பக்தர்களுக்கு வழங்கப்படுவைத 500 பக்தர்களுக்கும், செவ்வாய், வியாழன், வெள்ளி, பௌர்ணமி, கிருத்திகை மற்றும் சஷ்டி தினங்களில் நாளொன்றுக்கு 500 பக்தர்களுக்கு வழங்கப்படுவதை 800 பக்தர்களுக்கும், மயூர வாகன சேவை, சிவராத்திரி, மகாசிவராத்திரி, குரு பூஜை, கந்தசஷ்டி தினங்களில் 800 பக்தர்களுக்கு வழங்கப்படுவதை 1000 பக்தர்களுக்கும் விரிவுபடுத்தி அன்னதானம் வழங்கப்படும்.
– பக்தர்களுக்கு ஒருவேலை அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 760. திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மேலும் 6 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
– திண்டுக்கல் மாவட்டம், பழநி, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் ஏற்கனவே காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்படும்.
– திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் தற்போது 20 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இவ்வாண்டு மேலும் 5 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
– பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.50,000/- மதிப்பில் சீர்வரிைசகள் வழங்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் 1100. இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டு 700 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் ரூ.10,000/- உயர்த்தி, 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர்வரிைசகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.
– திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றியும் திருக்கோயில் மண்டபங்களில் வாடகையின்றியும் திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மணமக்களுக்கு புத்தாடைகளும், 4 கிராம் தங்கத் தாலியும் திருக்கோயில் சார்பாக வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மணமக்களுக்கு 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில்சீர் வரிைசகள் வழங்கப்படும்.
– நிதிவசதியற்ற திருக்கோயில்களில் ஏற்கனேவ மிகக் குைறந்த மாத ஊதியம் பெற்று வரும் இசைக்கலைஞர்களுக்கு ரூ.10,000/- தொகுப்பூதியம் வழங்கப்படும்.
– திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், பழநி அருள்மிகு பழநியாண்டவர் திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டு வரும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளுக்காக, ஒருங்கிணைந்த அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப் பள்ளி மற்றும் தங்கும் இடம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
– 19 திருக்கோயில்களில்19 புதிய இராஜ கோபுரங்கள் ரூ.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
– 23 திருக்கோயில்களில் 23 புதிய திருத்தேர்கள் ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும்.
– 70 திருக்கோயில்களில் ரூ.54.10 கோடி மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடங்கள் கட்டப்படும். மேலும், 14 திருக்கோயில்களில் ஏற்கனவே உள்ள அன்னதானக் கூடங்கள் ரூ.3.25. கோடி மதிப்பீட்டில் சீரைமக்கப்படும்.
– 12 திருக்கோயில்களில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு கட்டப்படும்.