“சட்டப்பேரவையில் என்னமோ நடக்குது மர்மமாக இருக்கிறது..!” என்று, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் இன்று பொதுப் பணி துறை, நெடுஞ்சாலை துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெற்றது.
அப்போது, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுந்து பேசும் போது, காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கதர்பட் கை தட்டினார்.
அப்போது, பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “இன்று சட்டப் பேரவை விசித்திரமாக பல விஷயங்களை பார்த்து உள்ளது. இன்று, சட்டப் பேரவையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை” என்று, சூட்சமமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக, பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகிறார் என்றும், காரல் மார்க்ஸ் , லெனின் போன்றவர்கள் இருக்கும் போது, வீரத்துறவி விவேகானந்தர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேசினார்” என்றும், தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டினார்.
“அதன் தொடர்ச்சியாகவே, தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும் போது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கதர்பட் கைதட்டி கொண்டு உள்ளார்” என்றும், “இதை பார்த்தால், சட்டப் பேரவையில் என்னமோ நடக்குது? மர்மமாக இருக்கிறது..! என்று தொன்றுகிறது” என்றும், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.