தாய் யானையை பிரியும் குட்டி யானையை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சமீப காலமாக தாய் யானையை குட்டிகள் பிரியும் நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது என்றும், இந்த குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்த்து வைக்க வனத்துறையினர் முயற்சிக்கின்றனர் என்றும், ஆனால் அந்த குட்டியானைகளை மற்றொரு கூட்டம் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு 5 சதவீதம் மட்டுமே உள்ளதாக மறைந்த யானைகள் நிபுணர் அஜய் தேசாய் தெரிவித்துள்ளதை மேற்கொள் காட்டி, மனு தாக்கல் செய்தார்.
இதனால், “தாயைப் பிரியும் குட்டி யானைகளை; வேறு ஒரு யானைக் கூட்டத்துடன் சேர்ப்பதற்கு பதிலாக, 4 அல்லது 5 குட்டியானைகளைச் சேர்த்து ஒன்றாக வளர்த்து பிறகு வன பகுதியில் விட உத்தரவிட வேண்டும்” எனடறும், தனது கோிக்கை மனுவில் கோரியிருந்தார்.
அதே போல், “வால்பாறை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புலிக்குட்டி, சுயமாக வேட்டையாடும் வகையில் தேவையான அளவில் நிலத்தில் வளர்த்து வனத்தில் விட வேண்டும் என்றும், அதற்கு ஏற்படி வன விலங்குகளுக்கு சிகிச்சை வழங்கவும், மறுவாழ்வு வழங்கவும் சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் அடங்கிய நவீன மருத்துவ வசதியை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும், அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, இது குறித்து விசாரணை நடத்திய நிலையில், “மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்” என்று, அதிரடியாக உத்தர பிறப்பித்து உள்ளது.
அத்துடன், “தமிழகத்தில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேணடும் என்றும், கோவை சாடிவயல் பகுதியில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்கவும், தமிழ்நாடு தொழில் நுட்ப நகர கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும், தனது மனுவில் முரளிதரன் கோரிக்கை வைத்துள்ள குறிப்பிடத்தக்கது.