12 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வராத தாய் – மகள் இருவரும் குப்பை, குளங்களுடன் வசித்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோவை தனியார் குடியிருப்பு ஒன்றில், “வீட்டை விட்டு வெளியே வராமல் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை, குளங்களுடன் தாய் மற்றும் அவரது மகள் வசித்து வருவமதக” கோவை மாநகராட்சி அதிகரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பான வீடியோ காட்சியும் வெளியானது.
இதனையடுத்து, கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று, தாய் மற்றும் அவரது மகள் இருவரையும் வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து, அவர்களது வீட்டை சுத்தம் செய்தனர். இதில், அந்த வீட்டிலிருந்து மட்டும் சுமார் நான்கு டன் குப்பையை சுத்தம் செய்து எடுத்துச் சென்றதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதாவது, கோவை காட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி அன்பாலயம் மகேந்திரனுக்கு சமீபத்தில் தகவல் வந்து உள்ளது.
இதனையடுத்து, அங்கு சென்ற பார்த்த அவர், அந்த வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று வீடியோ பதிவு செய்தார்.
அப்போது, அந்த வீட்டில் திரும்பிய பக்கம் எல்லாம் குப்பை குவிந்து கிடந்து உள்ளது. கூடவே, உணவுகள் அழுகி துர்நாற்றம் வீசி உள்ளது. கூடவே, ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்து கிடந்த தடயங்களும் காணப்பட்டு உள்ளது.
அந்த வீட்டில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி பெயர் ருக்மணி என்றும், அவரது மகள் 40 வயது மதிக்கத்தக்க திவ்யா என்றும் தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்ததில், அந்த பெண்மணியான ருக்மணி கணவர் இறந்தது முதல், தாயும் – மகளும் பயத்தில் அந்த வீட்டை விட்டு வெளியே வராமல் அந்த வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து உள்ளதும், தொலைபேசியில் மட்டும் தொடர்பு கொண்டு கிடைக்கும் உணவினை, 4 நாளுக்கு அவர்கள் சாப்பிட்டதும், தெரிய வந்தது.
மேலும், இவர்களது உறவினர்கள் அனுப்பும் பணத்தை வைத்து உணவருந்தியதும், சில உறவுகள் மூலமாக எந்த ஒரு துணையோ, தொடர்போ இல்லாமல் இவர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் அடைபட்டு கிடந்ததும் தெரிய வந்து உள்ளது.
குறிப்பாக, தாயும் – மகளும் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தாயிக்கும் – மகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அன்பாலயம் மகேந்திரன் அதிகாரிகளை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். இச்சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.