Tue. Jul 1st, 2025

தமிழக அரசை ஒரு காட்டு காட்டிய பா. ரஞ்சித்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக அரசை திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்ப்பட்ட கள்ளச்சாரய மரணம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்து உள்ளது” என்று, கூறியுள்ளார்.

“தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்றும், அதற்கு வன்மையான கண்டனங்கள்” என்றும், அவர் மிக கடுமையாக சாடி உள்ளார்.

“சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், “சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்றும், இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது” என்றும் கருத்து தெரிவித்து உள்ளார்.

“இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்” என்றும், திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *