“6 தொகுதிகளில் அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளது எங்களுக்கு பெரிய வெற்றி” என்று, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து, அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திதார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரித்திருக்கிறோம். இருப்பினும், தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை பாஜக சார்பில் அனுப்ப வேண்டும் என்று எங்களது தலைவர்களும் வேட்பாளர்களும் கடுமையாக முயற்சித்தோம். ஆனால், அது நடைபெறாமல் போனது ஏமாற்றமே” என்று, கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “6 தொகுதிகளில் அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளது எங்களுக்கு பெரிய வெற்றியே” என்றும், பெருமிதம் தெரிவித்தார்.
“தேர்தல் முடிந்த பின்னர் பாஜகவோடு சேர்ந்து தேர்தலை சந்தித்து இருந்தால், பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் என்று அதிமுக தலைவர்கள் கூறத் தொடங்கி இருக்கின்றனர் என்றும், ஆனால் தேர்தலுக்கு முன்பு மிகக் கேவலமாக நாவடக்கத்துடன் பேசாமல் பாஜகவை அதிமுக விமர்சித்தது” என்றும், குற்றம்சாட்டினார்.
அத்துடன், “நாவடக்கத்துடன் பேசி இருந்தால், அதிமுகவிற்கு இந்த நிலை வந்திருக்காது என்றும், இனியாவது அதிமுக தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டார்.
“திமுக 40 தொகுதிகளிலும் பெரும் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சதவீதத்தைக் காட்டிலும் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்து இருப்பதாகவும்” அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
“மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தோல்விக்கு பொறுப்பேற்ற விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்வைத்து விமர்சனம் குறித்த கேள்விக்கு” பதிலளித்த அண்ணாமலை, “என்னுடைய தந்தை கருணாநிதி ஆக இருந்தால் நானும் வெற்றி பெற்றிருப்பேன் கனிமொழி பாஜகவில் சேர தயாராக இருந்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கலாம்” என்றும், நக்கலாக அவர் பதில் அளித்தார்.
குறிப்பாக, “நாம் தமிழர் கட்சி பணம் கொடுக்காமல் நேர்மையுடன் இந்தத் தேர்தலில் வாக்குகளை பெற்றிருக்கின்றார்கள் என்றும், அவர்களை பாராட்டுவதாகவும்” அண்ணாமலை தெரிவித்தார்.