“நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் எங்கள் பள்ளிகளில் தான் படித்தார்கள்” என்று, 2 தனியார் பள்ளிகள் மாறி மாறி நாளிதழ்களில் விளம்பரம் செய்து உரிமை கொண்டாடிய சம்பவம் இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இது விளம்பர உலகம் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த சம்பவம்.
அதாவது, நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியான நிலையில், பல தனியார் நீட் பயிற்சி நிறுவனங்களும், தனியார் பள்ளிகளும் நாளிதழ்களில் பல லட்சங்கள் செலவு செய்து விளம்பரங்களை செய்து வருகின்றன.
அந்த வகையில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ ஸ்கூல் என்கின்ற தனியார் பள்ளியும், நாராயணா என்கிற தனியார் பள்ளியும் தங்கள் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துள்ளது தொடர்பான விளம்பரங்களை இன்று நாளிதழ்களில் வெளியிட்டு உள்ளனர்.
அதில், நீட் நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியர் என இருவரும், 2 வேறு வேறு தனியார் பள்ளிகிலும் படித்து முதலிடம் பெற்று உள்ளதாக குறிப்பிட்ட 2 பள்ளிகளும் விளம்பரப்படுத்தி உள்ளன.
முக்கியமாக, நீட் தேர்வு அதிக மதிப்பெண்களை மாணவர்கள் பெற்று உள்ளனர் என்பதை இந்த விளம்பரம் செய்வதன் வாயிலாக தங்கள் பள்ளிகளை நோக்கி அதிக மாணவர்களை ஈர்க்க முடியும் என்னும் யுத்திக்காக இவ்வாறாக அந்த விளம்பரம் செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஆனால், இவ்வாறு 2 தனியார் பள்ளிகளில் இரண்டு மாணவர்களும் பயின்ரார்களா? என்கிற கேள்வியும் சந்தேகமும் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்து உள்ளது.