Sat. Jan 11th, 2025

“வயநாட்டிற்கு உதவிகரம் நீட்டுங்கள் தமிழக மக்களே..” – நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்

“வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவு செய்து உதவி செய்ய முன் வாருங்கள்” என்று, நடிகர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “அந்தகண்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் பிரசாந்த், “ “அந்தகன்” திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம்” என்று, குறிப்பிட்டார்.

“அதே சமயம், மர்மம் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்கள் பொருந்திய படம் என்றும், விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது” என்றும், கூறினார்.

“இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை. ரீமெட் படம் 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும். தற்போது “அந்தகன்” திரைப்படம் 400 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளது. திரையரங்குகளில் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றும், தெரிவித்தார்.

அப்போது, “ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது” குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், “கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவது குறித்த முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது” என்றும், கூறினார்.

குறிப்பாக, “வயநாட்டில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் உதவி கரம் நீட்ட வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்” என்றும், நடிகர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *