“இரண்டு நகைச்சுவையும் முட்டிக்கொண்டது” என்று, ரஜினி – துரைமுருகன் நகைச்சுவை பேச்சை பற்றி கவிஞர் வைரமுத்து பேசி உள்ளார்.
கவிஞர் வைரமுத்து கலைஞர் நூற்றாண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சில விசயங்களை வெளிப்படையாகவே போகிற போக்கில் ஜாலியாக பேசிவிட்டு சென்றார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாகவும், நக்கலாகவும் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியல் பேசிய கவிஞர் வைரமுத்து, “இப்படித்தான் இரண்டு நகைச்சுவையும் முட்டிக்கொண்டது. நான் 2 பேருக்கும் மத்தியில் அகப்பட்டு நசுங்கி விட்டேன். ரஜினி, எனது ஆருயிர் கலை சகோதரர். துரை, எனது அரசியல் தலைவர். 2 பேருக்கும் மத்தியில அகப்பட்டு 2 பேருக்கும் நல்ல புள்ளை ஆக வேண்டும் என்றால், நீ என்னவாக இருக்க வேண்டும் என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.
ரஜினி ஒரு நகைச்சுவை சொன்னார். துரைமுருகன் ஒரு நகைச்சுவையை சொன்னார். நேற்று அந்த நகைச்சுவை ரொம்ப சோகமாக பேசப்பட்டு, நகைச்சுவை என்பது இது தான் என உச்சத்திற்கு வந்துவிட்டது.
இன்றைக்கு துரைமுருகன் சொல்லியிருக்கிறார். என்ன சொன்னா தெரியுமா? “நாங்கள் நகைச்சுவையாக பேசிக் கொண்டோம். ஏனப்பா, நீங்கள் பகை சொல்லாக பார்க்கிறீர்கள்? ஒரு வார்த்தையில் விஷயத்தை முடித்து விட்டார்.
எங்கள் தமிழில் ஒரு பழம் பாடல் உண்டு. அது தான் ரஜினி அவர்களுக்கும், துரைமுருகன் அவர்களுக்கும் இன்று நிகழ்ந்து இருக்கிறது.
கல்லில் விழுந்த பிளவா? தங்கத்தில் விழுந்த பிளவை கல்லில் விழுந்த பிளவை ஒட்ட வைக்க முடியாது. தங்கத் தட்டில் பிளவு விழுந்தால், நெருப்பு காட்டினாள் ஒட்டிவிடும். தங்கம் பிளவுபடாது கல் பிளவு படும் இரண்டு தங்கங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று கூறினார்.
பெரியவர்கள் அப்படித் தான் .பெரியவர்களின் நட்பு எப்படி தெரியுமா? தண்ணீரில் அம்புக்குறிச்சது மாதிரி அந்த அம்பு பிரித்தால் ரொம்ப நேரம் இருக்குமா? இருக்காது. நீரோட்டத்தில் கடந்து காணாமல் போவது போல, இந்த வம்புக்கு இழுத்த தடமும் நேற்றோடு போய்விட்டது” என்று, கவிஞர் வைரமுத்து பேசினார்.