தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கிட்டதட்ட முழு நேர அரசியலை தொடங்கி விட்டது என்றே சொல்லாம். அதற்கு ஏற்றார் போல் அக்கட்சியின் தலைவர் நடிவர் விஜய், தமிழக களத்தில் இறங்கி அரசியல் களத்தில் களமாடத் தொடங்கிவிட்டார்.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் களத்தில் இறங்கி நேரடி அரசியல் களத்தில் இறங்கி பல்வேறு விசயங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான், சென்னை தி.நகர் பகுதியில் சாலையோரமாக கடை வைத்திருப்பவர்களுக்கு தவெக கொடி பொறிக்கப்பட்ட குடைகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.
இது குறித்தான தகவல் அறிந்து சென்னை மாம்பலம் போலீசார் அங்கு வந்து பார்த்து உள்ளனர். அப்போது, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அனுமதி இல்லாமல் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முறையான அனுமதி இல்லாமல் இப்படியான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று புஸ்ஸி ஆனந்திடம் போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து பைக் ஒன்றை ஓட்டி சென்று விட்டார். ஆனால், அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றாக கூறப்படுகிறது. இதனால், மாம்பலம் போக்குவரத்து போலீசார் புஸ்ஸி ஆனந்திற்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதனிடையே, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.