Mon. Dec 23rd, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐந்து பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 21 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்து உள்ளனர்.

இந்த வழக்கில், முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோரை செம்பியம் தனிபடை போலீஸ்சார் 3 நாட்கள் காவலில் எடுத்தும் ஹரிகரன் என்பவரை 5 நாட்கள் காலில் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் சிலரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகிய ஐந்து பேரை 7 நாட்கள் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையில், எழும்பூர் நீதிமன்றம் நீதிபதி 5 பேருக்கு 7 நாட்கள் காவல் வழங்கி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 7 பேரும் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து போலீஸ் வாகனம் மூலம் பாதுகாப்பாக தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்த செம்பியம் தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் தான், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க இருப்பதால், இந்த முறை அந்த விசாரணை வேற மாதிரி இருக்கும் என்றும் போலீசார் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுவதால், இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உளளது குறிப்பிடத்தக்கது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *