தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த காவல் நிலையங்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால், பரிசு கோப்பை வழங்கினார் பாராட்டினார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில், வருடம் வருடம் சிறப்பாக செயல்படும் முதல் 3 காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஆகச் சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் பரிசு கோப்பை வழங்கப்படும் என்று, தமிழக காவல் துறை ஏற்கனவே அறிவித்தது.
இதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன்படி, காவல் நிலையங்களில் திறன்மேம்பாடு மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு அளவிடுகளின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், மாநகரங்கள் தோறும் காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு மாவட்ட, மாநகர அளவில் முதல் இடம் பிடிக்கும் காவல் நிலையங்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் படி, 2024 ஆம் ஆண்டான இந்த வருடம் திருத்தணி காவல் நிலையம், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம், திருப்பத்தூர் நகர காவல் நிலையம், ராணிப்பேட்டை காவல் நிலையம், காட்பாடி காவல் நிலையம், திருப்பாபுளியூர் காவல் நிலையம், விழுப்புரம் தாலுகா காவல் நிலையம், செங்கல்பட்டு நகர காவல் நிலையம், சிவகாஞ்சி காவல் நிலையம், கள்ளக்குறிச்சி எலவனாசூர் கோட்டை காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்கள் முதல் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது.
இந்த காவல் நிலையங்களுக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குனரும், டிஜிபியுமான சங்கர் ஜிவால் கோப்பைகளை வழங்கி பாரட்டு தெரிவித்தார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையம் தொடர்ந்து மூன்று முறை மாவட்டத்தில் முதலிடம் பிடித்து பரிசு கோப்பை வென்று அசத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.