தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக “புதுப்பேட்டை” படம் ரீ ரிலீஸாகிறது.
தமிழ் சினிமாவில் புதிய புதிய படங்களின் வரத்து சற்று குறையத் தொடங்கி உள்ளது. அப்படியான தருணங்களில் இன்று புகழின் உச்சத்தில் உள்ள நடிகர்களின் சூப்பர் டூப்பர் ஹிட்டான பழைய படங்களை மீண்டும் ரீ ரிலீஸாகி வருகிறது.
அதில் விஜயின் “கில்லி” உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் சக்கைப் போடு போட்டதும் உண்டு. சில படங்கள் வசூல் சற்று குறைவாகவே இருந்தாலும், ஓராளவுக்காவது கல்லா கட்டியதும் உண்டு.
இந்த நிலையில் தான், தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக “புதுப்பேட்டை” படம் ரீ ரிலீஸாகிறது.
அதன்படி, ஜூலை 28 நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால், அந்த பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வரும் ஜூலை 28 ஆம் தேதி “புதுப்பேட்டை” படம் ரீ ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை, ஏடிஎம் புரொடக்சன்ஸ் வெளியிடுகிறது. கடந்த
கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “புதுப்பேட்டை” படம், ஒரு கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் முதன் முறையாக கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார்.
தனுஷ் உடன் நடிகைகள் சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். நடிகர் விஜய்சேதுபதி இந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே, அதே ஜூலை 28 ஆம் தேதி தனுஷ், இயக்கி நடிக்கும் அவருடைய 50 வது படமான “ராயன்” படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.