நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலக முழுவதும் ரிலீஸ் ஆனது. வெளியான நாள் முதல் படத்தின் வசூல் சாதனைக்கு மேல் சாதனைகளைப் படைத்து வருவதோடு மட்டுமல்லாமல், இன்று வரை திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அல்லு அர்ஜூன் மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கி வருகிறார்.
பொதுவாக, ஒரு புது படம் திரைக்கு வருகிறது என்றால் அதிகாலை முதலே தியேட்டரில் ரசிகர்கள் கூடியிருப்பது வழக்கம். அப்படி தான் புஷ்பா 2 படம் ரிலீஸ் அன்றும் ஹைதராபத்தில் உள்ள ஃபேமஸ் தியேட்டரான சந்தியா தியேட்டரில் படம் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். அங்கு ரசிகர்களுடன் படம் பார்க்க படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜூனும் வந்திருந்தார். அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று மக்கள் கூட்டம் என்றைக்கும் இல்லாமல் அன்று அதிகளவில் கூடியிருந்தனர். இதனால், கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
அப்போது படம் பார்க்க வந்த ரேவதி என்பவர் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த அவருடைய குழந்தையும் கூட்ட நெரிசலில் சிக்கி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது இறப்பிற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என்று இறந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்ததையடுத்து, கடந்த 13 ஆம் தேதி அல்லு அர்ஜூனை தெலங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் 14 ஆம் தேதி காலை வரை சிறையில் அடக்கப்பட்டார். பின்னர், தெலங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதால் 14 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு திரைத்துறையினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டாலே, கிட்டத்தட்ட மரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக மூளைச்சாவு அடைந்துவிட்டால், ஒரு மனிதனின் உடலில் அனைத்து உடல் பாகங்களும் அடுத்தடுத்து செயலிழக்கச் செய்யும்.
ஆனால், அதற்குள் அந்த உடலில் நல்ல நிலையில் உள்ள கிட்னி, கண் போன்ற பாகங்களை மற்றவர்களுக்கு பொருத்தும் நோக்கில் எடுத்துவிடுவார்கள். ஆனால் தற்போது மூளைச்சாவு அடைந்திருப்பது சிறுவன் என்பதால், மருத்துவக்குழு என்ன மாதிரியான அறிவுரைகளை வழங்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்