“விஜய் கட்டிய கோயிலில் தெய்வீக அதிர்வுகளை உணர்ந்தேன்” என்று, நடிகர் ராகவா லாரன்ஸ் உருக்கமாக பேசியது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் அரசியலில் குதித்ததும், தனது முதல் பணியாக ‘கிறிஸ்தவர்’ என்ற அரசியல் ரீதியிலான விமர்சனனத்திற்கு, முற்று புள்ளி வைக்கும் வகையில், இந்து மக்களுக்காக ‘சாய் பாபா’ கோயில் கட்டிகொடுத்து, தன்னை எதிர்த்து பேசியவர்களுக்கு, தனது செயலால் சவுக்கடி கொடுத்து உள்ளார் நடிகர் விஜய்.
அதாவது, நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, தீவிர சாய்பாபா பக்தர் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தயார் ஷோபாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, நடிகர் விஜய் சாய் பாபா கோயிலைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். இதனால், சென்னை மக்கள் அம்பத்தூர் அருகே உள்ள கொரட்டூர் சாய்பாபா கோயிலுக்கு தினமும் படையெடுத்து வருகிறார்களாம்.
இந்நிலையில், சென்னை கொரட்டூர்ல நடிகர் விஜய் கட்டிய கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வருகை தந்தார். இது குறித்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ், “நான் ராகவேந்திரர் கோயில் கட்டுன போது, விஜயின் அம்மா ஷோபா வந்து பாட்டுப் பாடுனார்கள். ஆனால், இன்று அவர்கள் கட்டிய கோயிலுக்குள்ள நான் போனதும், தெய்வீகமான அதிர்வுகள நான் அப்படியே உணர்ந்தேன்” என்றும், ராகவா லாரன்ஸ் பதிவிட்டு உள்ளார்.