இந்தியாவில் தற்போது இரண்டு வகையான 5 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஒன்று உலோகத்தால் ஆன 5 ரூபாய் நாணயம், மற்றொன்று பித்தளையால் ஆன 5 ரூபாய் நாணயம். இவற்றில் உலோகத்தால் ஆன 5 ரூபாய் நாணயங்களின் புழக்கம் கணிசமாகக் குறைந்து வருகிறது. ஏனென்றால், உலோகத்தால் ஆன 5 ரூபாய் நாணயத்தை உற்பத்தி செய்ய அதிகமாக செலவு ஏற்படுவதால், ரிசர்வ் வங்கியும், அரசும் உலோக நாணயங்களின் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நாணயங்களின் உற்பத்தியை நிறுத்த இன்னொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, இந்த உலோக நாணயங்களில் பயன்படுத்தப்படும் உலோகத்தை உருக்கி ரேஸர் பிளேடு போன்ற பொருட்கள் தயாரிக்க வாய்ப்புள்ளதாம். அதுவும் ஒரு 5 ரூபாய் நாணயத்தில் இருந்து கிட்டத்தட்ட 5 ரேஸர் பிளேடுகளை உருவாக்க முடியுமாம்.
அப்படி உருவாக்கப்பட்ட ஒரு ரேஸர் பிளேடு ரூ. 5 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்யப்படலாம். அப்படி என்றால், நாணயங்களின் உற்பத்தி விலையைவிட அதிக லாபம் ரேஸர் பிளேடு விற்பனையில் கிடைக்கிறது. அதனால், இதன் மூலமாக சட்ட விரோதமாக சில செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக உலோகத்தால் ஆன 5 ரூபாய் நாணயத்தின் உற்பத்தியை அரசு நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆகையால், எதிர்வரும் காலங்களில் பித்தளையால் ஆன 5 ரூபாய் நாணயம் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் எனவும், உலோகத்தாலான 5 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருக்காது எனவும் கூறப்படுகிறது.