Mon. Dec 23rd, 2024

கடற்கரையை சுத்தம் செய்யும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா!

By Aruvi May6,2024

கடற்கரையை பகுதியை சுத்தம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா, “ஃபார்சி” திரைப்படத்தில் ரேகாவாகவும், “ராக்கெட் பாய்ஸ்” திரைப்படத்தில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா, திரைத்துறை மட்டுமின்றி தற்போது சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா தற்போது தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகிய புடவையில் அசத்தலாக தூய்மை பணியில் ஈடுபட்டதோடு, நேற்று நடந்த நிகழ்வில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காக அவர் SUP மெரினா கிளப்-ஐ சேர்ந்த குழுவினரோடு கை கோர்த்திருக்கிறார்.

குறிப்பாக, தன்னுடைய சமூக பணி தொடர்பான அனுபவம் குறித்து பேசிய நடிகை ரெஜினா, “எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக SUP மெரினா கிளப்-ஐ சேர்ந்த குழுவினரோடு இணைந்து செயலாற்றி வருகிறேன். அவர்களின் இந்த சமூக முன்னெடுப்பு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தது 12 வயதான சிறுவன் அனிஷ் தான். இந்த குழுவை வழி நடத்தும் அனிஷ், என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார்”, என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய நடிகை ரெஜினா, “கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது”. என்றும், பேசினார்.

திரைத்துறையில் ரெஜினா தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் “விடா முயற்சி” படத்திலும், நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் “செக்ஷன் 108” படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *