Mon. Dec 23rd, 2024

“வாடகை பணம் தரவில்லை..” இசைமைபாளார் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்..

“20 லட்சம் ரூபாய் வீட்டு வாடகை பணத்தை தரவில்லை” என்று, இசைமைபாளார் யுவன் சங்கர் ராஜா மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தான் வசித்து வந்த வீட்டுக்கு ரூ.20 லட்சம் வாடகை பணம் செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்ய முயற்சித்ததாகவும் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில், அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானமான வீட்டில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர், யுவன் சங்கர் ராஜா மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவானது, தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அந்த புகார் மனுவில், “கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள எங்கள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா 20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும் போதெல்லாம், யுவன் சங்கர் ராஜா தராமல் அலட்சியம் காட்டி மறுத்து பேசி வந்து உள்ளார்.

இதனால், நான் வாடகை பணம் கேட்க போன் செய்தே போதும், அவர் போனை எடுக்கவில்லை. தற்போது, அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அவர் வெளியே எடுத்து சென்று உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான புகார் மனுவை தீர விசாரித்து யுவன் சங்கராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்” என்று, அவர் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகார் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தரப்பில் மறுப்போ அல்லது விளக்கமோ இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *