சீமான் வீட்டு பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டில், முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று, போலீசார் கண்ணியக் குறைவாக நடத்தியது, அடித்து துன்புறுத்தி பொய் வழக்கில் கைது செய்த திமுக அரசின் காவல் துறை போக்கை க் கண்டித்தும் வருகின்ற 24 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள துணை ஆணையரிடம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான நல்வாழ்வு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கான நல்வாழ்வு சங்கர் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சுரேஷ்பாபு, “தொடர்ச்சியாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தாக்கப்படுவதை கண்டித்து 300 சென்னையில் அன்போடு நடத்த அனுமதி கடிதம் அளித்திருந்தோம். ஆனால், இதுவரை பதில் அளிக்காததால் இன்று துணை ஆணையர் அவர்களை சந்தித்து, மீண்டும் மனு அளித்தோம்.
எப்பொழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடமான வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய போலீசாரால் தடை விதிக்கப்பட்ட காரணத்தினால், சென்னை சிவானந்த சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி கேட்டு மீண்டும் மனு அளித்து உள்ளோம்.
ஆனால், இதுவரை எங்களுக்கு காவல்துறை சார்பில் அதற்கான பதிலை அளிக்கவில்லை. தொடர்ந்து திமுக அரசு ஜனநாயக முறையில் போராட அனுமதி தராமல் இருப்பது எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது.
இந்திய தேசத்திற்காக எங்களது சேவையை புரிந்து இந்திய நாட்டிற்காக எங்களது அர்ப்பணிப்பை அளித்த துணை ராணுவப் படையினருக்கு இந்த ஜனநாயக நாட்டில் நியாயம் கேட்டு போராட அனுமதிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. தொடர்ந்து நான்கு முறை பாஜகவினர் போராட முயற்சித்த பொழுதும், காவல் துறை அடக்குமுறையால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அனுமதி அளிக்காவிட்டால், நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து எங்களது உரிமையை நாங்கள் பெற்றுக்கொள்வோம். நாம் தமிழர் கட்சி சீமான் வீட்டில் தாக்கப்பட்ட துணை ராணுவ வீரருக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், அவரை அவதூறாக பேசி தாக்கிய காவல் ஆய்வாளர் மீது இதுவரை இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது ஒருவர் சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் சட்ட ரீதியாக போராடுவோம்” என்றும், அவர் தெரிவித்தார்.