சென்னையில் போலீசாரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை பெண் எஸ்.ஐ. சுட்டுப்பிடித்த பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல ரவுடி சிவகுமார் உட்பட முக்கியமான கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யார் இவர்..?
சென்னை டிபி சத்திரம் பழைய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி 35 வயதான ரோகித் ராஜ், ‘A’ கேட்டகிரி ரௌடியான ரோஹித் ராஜ் மீது, 3 கொலை வழக்குகள் உட்பட 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மிக முக்கியமாக, ரவுடி ரோகித் ராஜ் மீது பிரபல ரவுடிகளான சிவக்குமார், தீச்சட்டி முருகன், ஆறுமுகம் ஆகிய மூவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இந்த 3 கொலை வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட ரோகித் ராஜ் ஜாமீனில் வெளிவந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி ரோகித் ராஜ் மீது பிடிவாரண்ட் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வரும் ரவுடி ரோகித் ராஜை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, தலைமுறைவாக இருந்த ரவுடி ரோகித் ராஜ், தேனியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தனி படை போலீசார் அங்கு சென்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து, சேத்துப்பட்டு பகுதியில் விசாரணை மேற்கொண்டு வந்த போது, அவர் போலீசாரை கத்தியால் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சென்னையில் போலீசாரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை பெண் எஸ்.ஐ. சுட்டுப்பிடித்தார். இதனையடுத்து, லேசான காலில் காயமடைந்த ரோகித் ராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரவுடி ரோகித் ராஜ், டிபி சத்திரம் பகுதி முழுவதுமாக தனது கண்ட்ரோலில் எடுக்க கட்டப்பஞ்சாயத்து மாமுல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததும், பெரிய ரவுடி நான் தான் என கூறி தொடர்ச்சியாக செல்போனில் மிரட்டி பணம் கேட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.