Mon. Dec 23rd, 2024

மதிக்காத மனைவி.. மகன்கள்.. வீட்டிற்கு தீ வைத்த கணவன்..!

By Aruvi Apr14,2024

வீட்டில் மனைவியும், மகன்கள் மதிக்காததால் கடும் விரக்தி அடைந்த கணவன், வீட்டிற்கு தீ வைத்து எரித்ததில் கணவன் – மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

காரைக்குடியில் உள்ள வைத்தியலிங்க புரம் 2 வது தெருவைச் சேர்ந்த 60 வயதான தங்கராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 55 வயதில் லதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில், இரு மகன்களும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், கடந்த சில ஆண்டுகளாக மனைவி லதா மற்றும் அவரது இரு மகன்களும் தந்தை தங்கராஜை மதிக்காமல் இருந்துள்ளனர். அவர் பேச்சையும் கேட்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக, அவருக்கு உணவு கூட கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், கடும் மன அழுத்ததில் இருந்த தங்கராஜ், முன்னதாக அதிகாலை வீடு முழுவதும் பெட்ரோல் ஊற்றி, தனது வீட்டையே தீ வைத்து கொழுத்தி உள்ளார்.

இதனை அடுத்து, தீ வீடு முழுவதற்கும் மளமள என பரவியது. இந்த தீ விபத்தில் கணவன் தங்கராஜும், அவரது மனைவி லதாவும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முக்கியமாக, அந்த வீட்டில் தீ பரவியதை கண்ட மகன் நவீன் குமார், தனது மனைவி செல்வி மற்றும் குழந்தையை பத்திரமாக மீட்டிருக்கிறார். இதனால், அவர்கள் லேசனா காயத்துடன் உயிர் தப்பி உள்ளனர்.

அத்துடன், தொடர்ந்து தாயை காப்பாற்ற மீண்டும் வீட்டிற்குள் சென்ற நிலையில் அவருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த தங்கராஜ் மற்றும் லதாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயத்துடன் இருந்த நவீனை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உயிர் சிகச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக  கணவனே வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் கணவன், மனைவி இருவருமே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *