“Smoking Biscuit-யை சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில், Smoking Biscuit சாப்பிட உகுந்த உணவு பொருளா?” என்ற கேள்வி எழுந்து உள்ளது.
திரைப்பட இயக்குனர் மோகன் ஜி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பெரும் வைரலாக வரும் நிலையில், பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளன.
அதாவது, அந்த வீடியோ “ஸ்மோக்கிங் பிஸ்கட்” தொடர்பான வீடியோ. குறிப்பிட்ட அந்த வீடியோவில், “ஒரு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஷாப்பில் ‘ஸ்மோக்கிங் பிஸ்கட்’ வாங்கி சாப்பிடுகிறான். அந்த பிஸ்கட் சாப்பிட்ட அடுத்த சில வினாடிகளில் அந்த சிறுவன் கடுமையான வயிறு வலியால் துடிக்கிறான். சிறுவனி் அவரது தாயாரும், தந்தையும் பதறும் காட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பதறிப் போய் உள்ளனர். அத்துடன், “ஸ்மோக்கிங் பிஸ்கட்” பாதுகாப்பான உணவு பொருளா? என்ற சந்தேகத்தையும் பல பெற்றோர்களும் கேள்விகளாக எழுப்பி உள்ளனர்.
குறிப்பாக, திரைப்பட இயக்குனர் மோகன் ஜி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ வெளியிட்டு, அந்த வீடியோவின் கீழ், ஷஇது போன்று விற்கும் “Smoke Biscuit” என்ற, திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார்.
அத்துடன், “குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதில், ஊற்றப்படுவது Liquid Nitrogen-யை ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட அது உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்றும், தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து, கோரிக்கையும் விடுத்து உள்ளார்.
திரைப்பட இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டு உள்ள அந்த வீடியோ சம்பவம் இடம் “கர்நாடகா மாநிலம் தாவணகெரே என்ற பகுதியில் நடந்ததாக” தற்போது செய்திகள் உறுதியாகி உள்ளது.
குறிப்பாக, இது போன்ற “ஸ்மோக்கிங் பிஸ்கட்” தமிழ்நாட்டிலும் விற்கப்படுகிறது என்றும், சென்னை தீவுத்திடலில் நடந்த பொருட்காட்சி, கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடந்த திருவிழாக்களிலும் இந்த “ஸ்மோக்கிங் பிஸ்கட்” விற்கப்பட்டதாகவும் ஒவ்வொன்றாக தற்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.