“சீமானுக்கு திடீர் ஆதரவு? விஜயலட்சுமிக்கு எதிர்ப்பு?” என்று சாட்டையை சுழற்றுகிறாரா? என சந்தேகத்தை கிளப்பும் வகையில், தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டு உள்ளார்.
சற்று முன்னதாக, “இரவோடு இரவாக விஜயலட்சுமிக்கு சீமான் ரூ. 10 கோடி கொடுத்து விட்டார் என பேச தொடங்கி விடுவார்கள்” என்று, நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் பேசிய நடிகை விஜயலட்சுமி “உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க விருப்பட்டேன். தீர்ப்பின் அடிப்படையில் செட்டில்மெண்ட் என்று கூறியுள்ளதால் பலர் பேச தொடங்கி விடுவார்கள். ‘இரவோடு இரவாக விஜயலட்சுமிக்கு சீமான் 10 கோடி ரூபாய் கொடுத்து விட்டார் என பேச தொடங்கி விடுவார்கள்’. ஈழத்தமிழர்கள் மூலம் கிடைத்த பணத்தை என்னிடம் கொட்டுகிறார் என அபாண்டமாக என் மீது பழி சுமத்தி விடுவார்கள்” என்று, பேசியிருந்தார்.
குறிப்பாக, “நான் ஏதாவது சீமான் பற்றி பேசினால், பணத்துக்காக பேசுறா.. ஏன் இப்படி பேசுறீங்க? உச்ச நீதிமன்றத்தில் எனக்காக யாரும் போராடவில்லை. இந்த வழக்கில் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கப்போவதில்லை என தெரிந்து தான் கதறி அழுதேன். நான் எந்த போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை. என்னை அசிங்கப்படுத்துறது வேலை நடக்கிறது. அந்த அசிங்கத்தில் இறங்கி போராட அவசியமில்லை” என்று, நடிகை விஜயலட்சுமி வீடியோ பேசி வெளியிட்டு இருந்தார்.
நடிகை விஜயலட்சுமியின் வீடியோ வெளியான மறுநாளான இன்று, நடிகை விஜயலட்சுமி பேசி வெளியிட்ட வீடியோவுக்கு, பதிலடியாக “நாட்டு மக்களிடம் விஜயலட்சுமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று, பேசி தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து, வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், “எந்த வகையான நிவாரணம் சீமான் அவர்களிடம் இருந்து வேண்டும் என்று, நாட்டு மக்களுக்கு நடிகை விஜயலட்சுமி தெளிவு படுத்த வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளார்.
குறிப்பாக, “இனி ஒரே நிலையான பேச்சு, ஒரே நிலையான செயலில் இருப்பேன் என்று தமிழ்நாட்டு மக்களிடம் உறுதி கூற வேண்டும்” என்றும், நடிகை விஜயலட்சுமியை வீரலட்சுமி வலியுறுத்தி உள்ளார்.
“அப்படி இல்லையென்றால், எங்க தமிழர் முன்னேற்ற படையும் தமிழ் நாட்டு மக்களும் உதவி செய்ய முன்வர மாட்டார்கள் என்பதை, இந்த வீடியோவின் வாயிலாக நடிகை விஜயலட்சுமி அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும், கி. வீரலட்சுமி வீடியோ பேசி வெளியிட்டு உள்ளார். வீரலட்சுமியின் இந்த வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.