குழந்தைகள் சாப்பிடும் செர்லாக்கில் என்னவெல்லாம் கலந்திருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த அதிர வைக்கும் ரிப்போர்ட்டை இப்போது பார்க்கலாம்..
குழந்தைகளுக்கு சரியான முறையில் பால் கொடுக்க முடியாத தாய் மார்கள், தாய் பாலுக்குப் பதிலாக செர்லாக்கைத் தான் விரும்பி கொடுப்பார்கள். குழந்தைகளும் செர்லாக்கை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமில்லாமல், பெரியவர்கள் வரை அதனை அப்படியே சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட செர்லாக்கை உலக தரம் வாய்ந்த நெஸ்லே நிறுவனம் தான், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவாக தயாரிக்கிறது.
ஆனால், இந்த செர்லாக்கில் இரட்டைத் தரம் தொடர்பான விசயங்கள் இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்த விசயத்தை, துளியும் மறுக்காமல் அந்நிறுவனம் எதிர்பாராத பதிலைக் கூறியிருப்பது வாடிக்கையாளர்களை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதாவது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஊட்டச்சத்துப் பொருளான செர்லாக்கில் அடிக்கடி உண்ண வைக்கும் “அடிக்டிவ் சுகர்” எனப்படும் சுவைக்கு அடிமையாகும் உப்புக்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி இயிருக்கிறது.
சுவிட்சர்லாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நெஸ்லே நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் சந்தை இருக்கும் நிலையில், அதன் இரட்டை தரத்தை உளவு அமைப்பு ஒன்று தோலுரித்து உலக சந்தையில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
இது குறித்து, சர்வதேச குழந்தை உணவுகளுக்கான நடவடிக்கை அமைப்பு என்ற புலனாய்வு நிறுவனம், நெஸ்லேவின் செர்லாக்கை எடுத்து ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வு முடிவுகளில், “நெஸ்லேவின் முக்கிய சந்தையான ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் விற்கப்படும் செர்லாக்கில், உடலுக்குக் கேடு விளைவிக்கும் அடிக்டிவ் சுகர் எதுவும் கலக்கப்படாமல் விற்கப்படுகிறது என்றும்; ஆனால், இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் விற்பனை ஆகும் செர்லாக்கில், ஆபத்தை ஏற்படுத்தும் அடிக்டிவ் சுகர்கள் கலக்கப்படுவதாகவும்” அந்தப் புலனாய்வு நிறுவனத்தின் ஆய்வு முடிவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, “இந்தியாவில் மட்டும் 2022 ஆம் ஆண்டின் கணக்குப் படி பார்க்கும் போது, செர்லாக் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை நடந்திருப்பதாகவும், இவ்வளவு தொகைக்கு வர்த்தகம் நடைபெறும் நாடுகளுக்கு இரட்டைத் தரத்தைக் கடை பிடிக்கும் நெஸ்லேவின் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடுகளை கண்டித்திருப்பதாகவும்” உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
முக்கியமா, “6 வயதில் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துப் பொருளாக செர்லாக் இருக்கும் நிலையில், அந்த வயது முதலே குழந்தை அடிக்டிவ் சுகருக்கு ஆட்பட்டால் பிற்காலத்தில் உடல் உபாதைகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளதாகவும்” அந்நிறுவனம் எச்சரித்து உள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், “எங்கள் செர்லாக் உணவுப் பொருளில் சுகர் சேர்ப்பதை 11 சதவீதம் ஆக குறைத்து விட்டோம்” என்றும் கூறியுள்ளது.
அதே நேரத்தில், “நெஸ்லே நிறுவனம் மற்ற நாடுகளுக்கு 1 சதவீதம் கூட சுகர் கலக்காமல் விற்கும் நெஸ்லே நிறுவனத்தின் இந்த பாரபட்சமான போக்கும்” என்று, இந்தியாவின் அப்பாவி வாடிக்கையாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.