Sun. Dec 22nd, 2024

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், விடுதியில் அறை எடுத்து மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் 27 வயதான பிரதீப், பணி நிம்மித்தமாக தருமபுரிக்கு செல்லும் போது, அங்கு 22 வயதான அபூர்வா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை காதலித்து உள்ளார்.

இதனையடுத்து, இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் முறைப்படி திருமணம் நடக்கும் வரை, தனது பெற்றோர் வீட்டில் அபூர்வா தங்கியிருந்து வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வந்து பிரதீப்புடன் சின்ன சுப்புராயபிள்ளை வீதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் தான், கடந்த 19 ஆம் தேதி அபூர்வா புதுச்சேரிக்கு வந்து தனது கணவர் பிரதீப் உடன் வழக்கமாக தங்கும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். அப்போது, கடந்த 20 ஆம் தேதி இரவு பிரதீப், அபூரவாவை தோளில் சுமந்தபடி மாடி அறையில் இருந்து கீழே வந்துள்ளார்.

அப்போது, அந்த விடுதியில் பணியில் இருந்த காரத்திக் என்பவர், “பிரதீப்பிடம் என்ன நடந்தது?” என்று கேட்டு உள்ளார். அதற்கு பிரதீப், “அபூரவா மயங்கி விட்டதாகவும், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்” என்றும், கூறியுள்ளார். ஆனால், அவரது முகத்தை பார்த்த போது முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு வீங்கிய நிலையில் இருந்து உள்ளது.

தொடர்ந்து, இருவரையும் ஆட்டோவில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இது தொடர்பாக கார்த்திக் விடுதி மேலாலளர் மற்றும் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து, மருத்துவமனை சென்று பார்த்த போலீசார், அபூர்வா காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டு கொலை வெறி தாக்குதலில் ஈடுப்பட்ட அவரது கணவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, “மனைவி அபூர்வா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக அபூர்வாவின் நண்பர் ஒருவர் மூலமாக தெரியவந்ததை அடுத்து, அவரை இது குறித்து கேட்ட போது அவர் சரியாக பதில் சொல்லாததால், ஆத்திரத்தில் அவரை கொலை வெறியாக தாக்கியதாக” தெரவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து விடுதி மேலாளரிடம் புகார் பெற்ற போலீசார் பிரதீப் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கடந்த 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபூர்வா நேற்று முந்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனையில் இருந்து பெரிய கடை காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார மாற்றி உள்ள நிலையில், சிறையில் உள்ள பிரதீப்பை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

இதனிடையே, நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை விடுதியில் அடைத்து வைத்து கணவர் அடித்தே கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *