2025ஆம் ஆண்டின் குடியரசு தின விழா இன்னும் இரண்டு நாட்களில் வரவுள்ளது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரின் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள பலருக்கும் அழைப்பு விடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனெனில், பொதுவாக ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே அழைக்கப்படுவது வழக்கம்.
ஆனால், இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத, கட்சி ஆரம்பித்து ஒரே ஒரு வருடம் மட்டுமே ஆகியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், விஜய் இந்த தேநீர் விருந்தில் கலந்துக் கொள்வாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.