Sun. Dec 22nd, 2024

Srivilliputhur Andal Temple Incident: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம்.. நடந்தது என்ன? அறநிலைத்துறை விளக்கம்..

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றபோது இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, அங்கு என்ன நடந்தது என்பது குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இன்று மார்கழி மாதம் பிறந்துள்ள  நிலையில், புகழ்பெற்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சியும், நாட்டியஞ்சலியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக இசையமைப்பாளர் இளையராஜா வந்திருந்தார். அப்போது, இளையராஜாவுக்கும், கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோருக்கும் மேல தாளங்கள் முழங்க கோயில் யானையை அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலில், ஆண்டாள் ரங்க மன்னரை தரிசனம் செய்வதற்காக ஜீயர்கள், பட்டர்களுடன் இளையராஜாவும் செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்கே இருந்தவர்கள் இளையராஜாவை வெளியே நிற்குமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், அர்த்த மண்டப நுழைவாயிலில் இருந்துபடியே இளையராஜா தரிசனம் செய்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறை விளக்கம் கூறியதாவது,

அர்த்த மண்டபத்திற்குள் அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் தவிர மற்றவர்கள் செல்லும் வழக்கமில்லை, அனுமதியும் கிடையாது. இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட பின்னரே அர்த்த மண்டப வாசலில் இருந்து சாமி தரிசனம் செய்தார். அர்த்த மண்டபத்திற்கு உள்ளே இருந்து ஜீயர் தரிசனம் செய்ததற்கும் இதுதான் காரணம் என்று அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *