Sun. Dec 22nd, 2024

‘நடிகர் சிவாஜி கனேசன் பரிசாக வழங்கப்பட்ட யானை உயிரிழந்ததால்..’ சட்டப் பேரவையில் நடந்த விவாதம் என்ன?

“தஞ்சை பெரிய கோயிலுக்கு நடிகர் சிவாஜி கனேசன் பரிசாக வழங்கிய யானை உயிரிழந்ததால், கோயிலுக்கு புதிய யானை வழங்க வேண்டும்” என்று, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் கோரிக்கை வைத்தது தொடர்பாக விவாதம் நடைபெற்து.

தமிழக சட்டப் பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதாம் நடைபெற்றது. அப்போது, பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசும் போது, “திமுக ஆட்சியில், உயிரிழந்த 11 யானைகளுக்கு 60 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளதாக” தெரிவித்தார்.

அதாவது, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் பேசிய திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், “நீதிகட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்து சமய அறநிலையங்கள் துறை, திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருவாரூர் தேரை ஓட்டி காட்டியவர் கலைஞர். சென்னை ஆதிகேசவ பெருமாள் கோயில் தேர் 87 ஆண்டுகளுக்கு பின் ஓட்டப்பட்டு உள்ளது.

ஆனால், நீதிக்கட்சியின் ஆட்சியில் மதவாத சக்திகள் செய்த அதே பிரச்சினைகளை தற்போதும் செய்து வருகின்றனர். ஆனாலும், 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்து சமய அறநிலையங்கள் துறையின் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கப்பட்டு உள்ளது” என்று பேசினார்.

அத்துடன், “தஞ்சை மாவட்டத்தில் உள்ள சில கோயில்களில் வருமானம் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. அங்கு உள்ள அர்ச்சகர்களுக்கு ஊதியம் வழங்காமல், ஓரு கால பூஜை செய்ய முடியாமல் இருந்த நிலையில், எந்த கோரிக்கையும் வைக்காமல், ஆய்வு கூட்டங்கள் மூலம் முதல்வர் தெரிந்துகொண்டு 88 கோயில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு ஊதியம், விளக்கு எரிய 3 கோடி நிதி மானியமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதற்கு நன்றி” என்றும், அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, “தஞ்சையில் உள்ள ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயிலுக்கு நடிகர் சிவாஜி கனேசன் குட்டியானையை பரிசாக வழங்கியிருந்தார். இந்த யானை உயிரிழந்துவிட்டது. இதனால், யாராவது பரிசாகவோ, அரசோ கோயிலுக்கு யானை வழங்க வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை வைத்தார்.

தஞ்சையில், 100-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான 4 கோயில்களின் திருப்பணிகள் நடத்திட வேண்டும், ராஜ ராஜ சோழன் எந்த போருக்கு செல்வதற்கு முன் தனது வாளை வைத்து பூஜை செய்தும், போர் முடிந்த பிட் வந்து வழிபடும் குல தெய்வ கோயிலில் ராஜ கோபுரம் கட்டித்தர வேண்டும்” என பல்வேறு கோயில் திருப்பணிகள் குறித்து திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு, “இது வரை உயிரிழந்த 11 யானைகளுக்கு 60 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. 27 யானைகளுக்கு நீராட குளியல் தொட்டி கட்டித்தரப்பட்டுள்ளது” என்று, குறிப்பிட்டார்.

“தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, வனத்துறை சட்டத்தின் படி நேரடியாக யானை திருக்கோயிலுக்கு வழங்க அனுமதி இல்லை. அதனால், யாராவது யானை வளர்த்து வந்தால், அந்த யானையை தானமாக கோயில் வழங்கினால் மட்டுமே கோயிலுக்கு யானை அரசு அனுமதியுடன் வழங்கப்படும். அதனால், யாரேனும் முன் வந்தால் யானை வழங்கப்படும்” என்று, கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *