கள்ளக் காதலிக்கு செலவு செய்த பணத்தை திருப்பி கேட்டு காதலன் பிரச்சினையில் ஈடுபட்ட நிலையில், காதலி படுகாயம் அடைந்த நிலையில், அவரது தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்து உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பவித்ரா என்பவருக்கும், அங்குள்ள மேலமெஞ்சானபுரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு பிரின்ஸ் என்பவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த சூழலில் தான், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பவித்ரா தனது கணவன் சந்துருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து அவரது தாயார் வீடான விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான், தனது தாயாருடன் வறுமையில் வாழ்ந்து வந்த பவித்ரா, தனது குடும்ப செலவிற்காக குத்துகல் வலசை பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்து உள்ளார்.
அப்போது, அதே கடையில் வேலை பார்த்து வந்த சக ஊழியரான 25 வயதான சுரேஷ் என்பவருக்கும், பவித்ராக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், பவித்ராவை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பவித்ராவுக்கு தேவையான பொருட்கள் முழுவதையும் சுரேஷ், வாங்கி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, “பவித்ராவை திருமணம் செய்து வைக்கக் கோரி” பவித்ராவின் தாயாரான கோமதியிடம் சுரேஷ் பெண் கேட்டு உள்ளார்.
அதற்கு கோமதி தனது பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்து உள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த சுரேஷ், “இது வரை உனது மகள் பவித்ராவுக்கு தான் செலவு செய்த 2 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் நடப்பது வேறு” என்றும், கடுமையாக எச்சரித்து மிரட்டி உள்ளார்.
இதனைப் பொருட்படுத்தாத கோமதி மற்றும் பவித்ரா இருவரும், சுரேஷை திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்த உள்ளனர். இதனால், கடும் மன உளச்சலுக்கு ஆளான சுரேஷ், கடந்த சில நாட்களாக விரக்தியில் காணப்பட்டு உள்ளார்.
பின்னர், சுரேஷ் தனது தனது உறவினரான மாரிமுத்து உடன் சேர்ந்து பவித்ராவின் வீட்டிற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்பொழுது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, சுரேஷ் மற்றும் மாரிமுத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளை வைத்து கோமதி மற்றும் பவித்ராவை சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில், பவித்ரா மற்றும் கோமதி இருவருமே ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தனர். இருவரும் வெட்டுக் காயத்தில் துடித்த நிலையில் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கோமதி அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த செங்கோட்டை போலீசார், சுரேஷ் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கள்ளக் காதலிக்காக காதலன் செலவு செய்த தொகையை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறில், தாய் மற்றும் மகள் இருவரும் அறிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.