“தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை!” என்று, ‘ தளபதி’ விஜய், கல்வி விருது விழாவில் சூடான அரசியல் பேசி அசத்தி உள்ளார்.
தளபதி’ விஜய்-யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவை ஆண்டு வரும் ‘தளபதி’ விஜய், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழ்களும், ஊக்கத் தொகையும் வழங்கி ஊக்கம் அளித்தார். அதன் தொடர்ச்சியாக, விழாவில் பேசிய நடிகர் விஜய், “தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெருமையோடு வந்திருக்கிற உங்களுடைய பெற்றோர்களுக்கும் இந்த பங்க்ஷன் இவ்வளவு சிறப்பா நடக்க காரணமா இருக்குற என்னுடைய பொதுச் செயலாளர் மிஸ்டர் ஆனந்த் அவர்களுக்கும், தமிழக வெற்றி கழகத்தினுடைய தோழர்களுக்கும், இரவு பகல் பார்க்காம இந்த ஏற்பாடுகளை இவ்வளவு சிறப்பா செஞ்சு முடிச்சு இருக்கீங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் என் நெஞ்சில் குடிய இருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்” என்று, ஆரம்பமே அதிரும்படி பேசினார்.
தொடர்ந்து பேசிய விஜய், “மீண்டும் ஒருமுறை எதிர்கால தமிழகத்தின் மாணவ மாணவிகளான உங்கள் எல்லாரையும் சந்திப்பதில், எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. உங்களை பார்க்கும்போது, ஆட்டோமேட்டிக்கா ஒரு எனர்ஜி ஆட்டோமேட்டிக்கா ஒரு கெமிஸ்ட்ரி ஒன்னு வருதோ சொல்லுவாங்க இல்ல, அது எனக்கு காலையில் இருந்து எனக்கு பயங்கரமா ஒர்க் அவுட் ஆயிட்டு இருக்கு. இவங்க எல்லாரும் முகத்தை பார்த்ததிலிருந்து. மை டியர் குட்டி நண்பா, நன்றியைத் தாண்டி வேற என்ன சொல்றது எனக்குத் தெரியல.
வாழ்க்கையை செலக்ட் பண்ண கூடிய அந்த கட்டத்தை நோக்கி போறீங்க. உங்கள சில பேருக்கு ஒரு கிளியர் பிச்சர் இருக்கும். நல்ல துறை என நீங்க எதை தேர்ந்த தெடுக்குறீங்கலோ, அதுல உங்களுடைய முழு ஈடுபாட்டோட உங்களுடைய 100% வெற்றி நிச்சயம் தான். அதனால, உங்களுக்கு புடிச்ச துறைய நீங்க தேர்ந்தெடுங்க. உங்கல அதுல இருக்கிற ஆப்ஷன்ஸ் எல்லாம் பஸ்ட் தெரிஞ்சுக்கோங்க. உங்க பேரன்ஸ் கிட்ட டிஸ்கஸ் பண்ணுங்க. உங்க ஸ்கூல் டீச்சர்ஸ் கிட்ட டிஸ்கஸ் பண்ணுங்க. அவங்க எல்லாரும் மீட் பண்ணுங்க. இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல நான் என்னுடைய ஒரு சின்னதா ஒரு கேரியர் கைடு ஒன்று சொல்றேன்.
மருத்துவம் பொறியியல் மட்டும் தான் நல்ல பீல்டுனு சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டுல உலகத்துல தலைசிறந்த டாக்டர், இன்ஜினியர்ஸ் எல்லாம் அதிகமாக இருக்காங்க. இங்கு நம்ம கிட்ட என்ன இல்ல? இப்படி திங்கடாமுக்கு எது இன்னும் அதிகமா தேவைப்படுது அப்படின்னா? நல்ல தலைவர்கள்! நாம் தலைவர்கள்ன்னு சொன்னது வெறும் அரசியல் ரீதியாக மட்டும் சொல்லல. இப்ப, நீங்க ஒரு துறைக்கு போறீங்க.. அதுல நீங்க சிறந்து விளங்கினீங்கன்னா.. அந்த ஒரு தலைமை இடத்துக்கு உங்களால ஈஸியா வர முடியும். அதைத் தான், நான் சொன்னேன். இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.
அது மட்டும் இல்ல, பியூச்சர்ல அரசியலும் ஏன் வந்து ஒரு கேரியர் ஆப்ஷனா வரக்கூடாது? அப்படி வரணும்ன்றது என்னுடைய விருப்பம். நல்லா படிச்சவங்க. அரசியலுக்கு வரணுமா? வேண்டாமா? உங்கள தான் கேட்கிறேன். நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா? வேண்டாமா? நல்லா படிச்சவங்க தலைவர்களாக வரணுமா? வேண்டாமா? உங்களுக்கே தெரியும். ஒரே செய்தியை, ஒரு நியூஸ் பேப்பர் ஒரு மாதிரி எழுதுவாங்க. அதே செய்தியை, இன்னொரு நியூஸ் பேப்பர் இன்னொரு மாதிரி எழுதுவாங்க. ஒரு செய்தியை ஒரு நியூஸ் பேப்பர்ல ஃப்ரண்ட் பேஜ்ல ஹெட்லைன்ஸ்ல போடுவாங்க. அதே செய்தியை, இன்னொரு நியூஸ் பேப்பர்ல கடைசி பக்கத்துல கூட போட மாட்டாங்க. நியூஸ் வேற, ஒப்பினியன் செய்தி வேற. கருத்து வேறெங்கறது உங்க எல்லாருக்குமே தெரியும்.
தொடர்ந்து பேசிய விஜய், “படிங்க. பட், எது உண்மை – பொய் என்று மட்டும் அனலைஸ் பண்ண மட்டும் கத்துக்கோங்க. அப்ப தான், இங்க உண்மையிலேயே நம்ம நாட்டில் என்ன பிரச்சனை? நாட்டோட மக்களுக்கு என்ன பிரச்சனை? இந்த சமூக தீமைகள் பத்தி எல்லாம் உங்களுக்கு தெரிய வரும். அது தெரிஞ்சுக்கிட்டாலே, இந்த ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யற இந்த பொய்யான பிரச்சாரங்களை எல்லாம் நம்பாமல் எது கரெக்ட்டு? எது தப்பு? எது உண்மை? பொய்? என்று, அனலைஸ் பண்ணி பார்த்துட்டு; நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு விசாலமான ஒரு உலக பார்வை உங்களால் வளர்த்துக்க முடியும்.
அப்படி, அது வந்துட்டாலே அதை விட ஒரு சிறந்த அரசியல் புரிதல் வேறு எதுவுமே இருக்க முடியாதுங்க. அதை விட, நம்ம நாட்டோட வளர்ச்சிக்கு நீங்கள் செய்யப்போற இந்த பங்களிப்பு வேற எதுவுமே இருக்க முடியாது. பைனலா, ஒரே ஒரு சின்ன விஷயம் பிரண்ட்ஸ்; அதுல எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஒரு கட்டத்துக்கு அப்பறம் பேரண்ட்ஸ்க்கு அடுத்தபடியாக இன்னும் சொல்லப்போனா பேலன்ஸ் விட அதிகமா நண்பர்களோட டைம் ஸ்பென்ட் பண்ணக்கூடிய அந்த ஒரு சூழ்நிலை ஏற்படும். அதனால, நல்ல நண்பர்களை தேர்வு நடக்க நீங்கள் கேட்கலாம். நட்பு என்பது தானே நாம் எடுத்து சூஸ் பண்ண முடியும்னு, அது ஒரு விதத்துல கரெக்ட்டு தான். அர்ச்சனா தான் கொஞ்சம் வேற மாதிரி சொல்றேன். இப்போ உங்களுடைய இந்த நட்பு வட்டாரத்துல இப்ப எதோ ஒரு விஷயம் தப்பா இருக்கு அப்படின்னா, இப்போ அதுல ஒரு சில பேர் இந்த தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்தாங்கன்னா.. முடிஞ்சா உங்களை நல்வழிப்படுத்த பாருங்க. இந்த தவறான பழக்கங்களில் மட்டும் ஈடுபடாதீங்க. ஈடுபடக் கூடாது. நான் முன்னாடியே சொன்ன மாதிரி தான், உங்களோட அடையாளத்தை எக்காரணத்தை கொண்டு இழந்திடாதீங்க. டோன்ட் லூஸ் யுவர் ஐடென்டிட்டி அட் எனி பாஸ். இது நான் ஏன் இவ்வளவு வலியுறுத்தி சொல்றனா? இப்போ ரீசன்ட் டைம்ல நீங்க பாத்தீங்கன்னா; நம்ம தமிழ்நாட்டுல இந்த போதை பொருட்களுடைய இந்த பயன்பாடு. அது தான் வந்து முக்கியமா இன்ஸ்டியூட் மத்தியில் ரொம்பவே அதிகமாகிருச்சு. ஒரு பெற்றோர் என்ற முறையில ஒரு அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையில எனக்குமே ரொம்ப அச்சமாக இருக்கு.
உங்களுடைய செல்ப் கண்ட்ரோல், உங்களுடைய செல் டிசிப்ளின், அது மட்டுமே, வாழ்த்துக்கள்! இன்னும் ஒரே ஒரு வாட்டி ப்ளீஸ்.. நோ டு டிராப்ஸ் தேங்க்யூ இந்த உறுதி மொழியை நீங்கள் எல்லாரும் எடுக்கணும். தேர்ச்சி பெற முடியாதவர்கள் நினைச்ச மாதிரி மார்க்ஸ் எடுக்க முடியாதவங்க, இன்னும் லைஃப்ல ஏதும் டிஸ்டப் ஆயிட்டாதீங்க. வெற்றி தோல்வி இரண்டுமே ஈக்குவலா பேலன்ஸ் பண்ணி போக கத்துக்கிட்டாலே போதும். தோல்வி நம்மகிட்ட வர்றதுக்கே பயப்படும். தோற்றவர்களுக்கும் சேர்த்து தான் இன்னைக்கு வந்து நான் பேசுறேன். ஏன்னா, மறுபடியும் இந்த மாதிரி அட்வைஸ் பண்ணி அவங்களுக்கு நான் போர் அடிக்க விரும்பல. ஏன்னா ஜெனரலாவே தெரியாது. மீண்டும் சந்திக்கும் வரை நன்றி! வணக்கம்.” என்று, நடிகர் விஜய் தனது பேச்சில் அனல் தெரிக்கவிட்டார்.