தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்திற்குள் முதலை நுழைந்ததால், கிராம மக்கள் பீதியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகில் உள்ள கடமங்குடி கிராமத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கடமங்குடி கிராமத்தில் காந்திராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், இன்று காலை அதிகாலை நேரத்தில் எழுந்து தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பி இருக்கிறார்.
அப்போது, தன்னுடைய வீட்டின் பின்புறம் பகுதியில் முதலை ஒன்று சுற்றித் திரிந்து உள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அவர், முதலையைப் பார்த்து கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து, அவரது கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், பலரும் முதலையை பார்த்ததும் பீதியில் ஓட்டம் பிடித்தனர். கிராமத்திற்குள் முதலை நுழைந்த விசயம், அக்கம் பக்கம் கிராமத்திறகும் பரவிய நிலையில், பொது மக்கள் ஒரு வித அச்சத்தில் உறைந்தனர்.
இதனையடுத்து, அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக புகாரின் அடிப்பட்ட நிலையில், விரைந்து வந்த அதிகாரிகள் காந்திராஜா வீட்டின் பின்புறம் இருந்த முதலையை பிடித்தனர். ஆனால், அந்த முதலை அவ்வளவு எளிதாகப் பிடிபடவில்லை. அதிகரிகளுக்கு போக்கு காட்டிக்கொண்டே இருந்தது. அதன் பிறகே முதலை பிடிப்பட்டது.
பிடிபட்ட அந்த முதலை, சுமார் 3 அடி இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த முதலையை கயிறு மூலம் கட்டி இழுத்த அதிகாரிகள், வேன் மூலம் பாதுகாப்பாக எடுத்து சென்றனர். பின்னர், பிடிபட்ட முதலை, அங்குள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து, அந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.