தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் கலந்துகொண்டு, தமிழக அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி பனை மற்றும் தென்னை மரங்களில் கல் இறக்கி விற்பனை செய்திட அனுமதி வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நீங்களெல்லாம் ஆட்சி நடத்தக்கூடியவர்கள் விவசாயிகளை போராட வைக்கலாமா? கடிகாரத்தை பார்த்துக் கொண்டு மூன்று வேளை சாப்பிடுகிறீர்களா ?” என்று, தமிழக அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பினார்.
“இந்த விவசாயிகளை கவனித்தீர்களா நீங்கள், உணவு உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? இந்த மக்கள் இந்த விவசாயக் குடிகள் ஒரு உணவை உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு காலம் எவ்வளவு உழைப்பு தெரியுமா?” என்றும், அவர் காட்டமாகவே கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகள் உழைப்பிற்கு அவர்களுக்கு என்ன வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? வேறு ஏதும் கவலை பட்டு உள்ளீர்களா? பெரியார் இருந்தால் இது போல் அனுமதிப்பாரா? அண்ணா இருந்தால் இதை அனுமதிப்பாரா? இந்த நிலைமைக்கு தள்ளிப் பெற்று இருப்போமா? ஏன், பெரியார் – அண்ணா அம்பேத்கர் படங்களை போடுகிறீர்கள்? எல்லாமே அரசியல்” என்று, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
“உணவு எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா? உற்பத்தி செய்பவன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்த்தீர்களா? ஆளக்கூடியவர்களுக்கு இந்த போராட்டம் ஒரு பொருட்டு கிடையாது. 1984 இல் இருந்து நான் இந்த மாதிரியான போராட்டங்களில் கலந்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து என் தலைமையில் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்ஈ அரசியல் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
வெளிநாட்டுக்கு செல்கிறீர்களே என்ன செய்கிறீர்கள்? விவசாயிகள் நலன் அங்கு சென்று ஓகே சொல்வீர்களா? கூட்டம் கூட்டமாக சென்று சேர்ந்து பார்த்துட்டு வருவீர்கள். எழுவது விழுக்காடு பேர் விவசாயம் செய்து வருகிறார்கள். எந்த விவசாயி மகிழ்ச்சியாக இருக்கிறார்? பொட்டிக்கடை வைத்திருப்பவன், கர்ச்சீப் விபவன் கூட மகிழ்ச்சியாக இருக்கிறான்.
ஒரே நாளில் 15 டிஎம்சி தண்ணி கடலில் கலக்கிறது. இதற்கு என்ன மாற்று வழி செய்தீர்களா? எங்க ஊர் நெய்வேலியில் விவசாயிகள் நிலைத்த எடுப்பதற்கு வேளாண் துறை அமைச்சர் துடித்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் ஆளுநர் அனைவருமே மக்களின் வரிப்பணத்தில் தான் வாழ்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சாப்பிட கூடாத வேலைகளை செய்கிறார்கள். எங்கு திரும்பினாலும் டாஸ்மார்க் மற்றும் மருந்து கடைகள்தான் இருக்கிறது” என்று, இயக்குனர் தங்கர்பச்சான் மிக கடுமையாக தமிழக அரசை விமர்சித்து பேசினார்.