Tue. Jul 1st, 2025

வருகிறது.. இலங்கையில் முதல் பெரியார் சிலை!

இலங்கையில் முதல் பெரியார் சிலை அமைய உள்ளதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் “பெரியார் VS பிரபகாரன்”என்று, தமிழக அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பினார் நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான். தொடர்ந்து, “பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? பெரியாக்கும் சமூக சீர்திருத்ததுக்கும் என்ன சம்பம்ந்தம்?” என்றும், “இது பெரியார் மண் இல்லை.. பெரியாரே ஒரு மண் தான்” என்றும், சீமான் மிக கடுமையான விமர்சனங்களை பொது வெளியில் பற்ற வைத்தார்.

மிக முக்கியமாக, ‘அம்மா, பொண்ணு, அக்கா, தங்கை என்ற பாகுபாடு இல்லாமல் பாலியல் விசயத்தில் பெரியார்.. இப்படியெல்லாம் பேசினார்” என்று சீமான் கொழுத்தி போட்ட நெருப்பு தமிழக அரசியலில் அனலை கிளப்பியது. ஆனால், அதன் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அனைத்தும், சீமான் எதிர்பார்க்காத விசயங்களே..

ஆம், பிரபாகரன் – சீமான் இடையேயான சந்திப்பு தொடர்பாக வெளியான புகைப்படங்கள் பொய்யானது என்றும், அது போட்டுா ஷாப் செய்யப்பட்டது என்றும், புதிய புயலை கிளப்பினார் சினிமா இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். “அந்த போட்டோவை போட்டோ ஷாப் செய்ததே நான்தான்” என்றும், வாக்கு மூலம் அளித்தார் சங்ககிரி ராஜ்குமார். இது, சர்வதேச தமிழகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான், இலங்கையில் தந்தை பெரியார் சிலை நிறுவுவது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும் போது, “தற்போது  தமிழக அரசியல் சூழலில் தந்தை பெரியார் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் உருவாகி இருக்கும்  நிலையில், இலங்கை பயணத்தில் இருக்கும் நான் பெரியாரின் கருத்துக்கள் இந்த மண்ணிற்கும் அவசியமானது என்பதை உணர்கிறேன்” என்று, பேசினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், “ இலங்கையில் முதல் பெரியார் சிலை அமைப்பது தொடர்பாக, இங்கு இருக்கும் சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை செய்ததன் பேரில், யாழ்பாணத்தில் ஒரு பெரியார் சிலை நிறுவுவது என்று  முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது” என்றும், பேசினார்.

முக்கியமாக, “லெனின், காரல் மார்க்ஸ், பாரதியார், காந்தியடிகள் என்று பல்வேறு தலைவர்களுக்கும் இங்கே சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது என்றும், அதன் அடிப்படையிலேயே பெரியாருடைய அவரது சமூக நீதி கருத்துக்களை ஈழத்து மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், நிறுவப்படும் முதல் சிலையாக இது இருக்கும்” என்றும், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசினார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *