தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வன உயிரினங்கள் மனிதர்கள் நடமாடும் பகுதிகளுக்கு உலா வருவது வாடிக்கையாகிவிட்டது.
சமீபதினங்களில் பல உயிரினங்கள் உலா வருவதை பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று இரவு முக்கிமலையிலிருந்து குந்தா செல்லும் சாலையில் பின்னாடி வாகனம் வர எந்த அச்சமும் இன்றி சாலையில் ஹாயாக நடந்து சென்ற வீடியோ அந்த வாகன ஓட்டிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் அடர்ந்த வனப் பகுதிகளிலும் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மட்டுமே சிறுத்தை புலி கரடி ஆகியவற்றை காண முடியும். சமீப தினங்களில் அனைத்து கிராம பகுதிகளிலும் சிறுத்தை கரடி ஆகியவை நடமாட்டங்கள் அதிகரித்துள்ளது.
நேற்று இரவு ஊட்டியில் இருந்து மஞ்சூர் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்திற்கு வழிவிடாமல் நான் தான் முன்னாடி போவேன் என்பதைப் போல மெதுவாக சாலையில் சிறுத்தை நடந்து சென்றது. அதன் பின்னர் மெதுவாக திரும்பிப் பார்த்து மீண்டும் சாலையில் நடந்து சென்றது.
சிறிது தூரம் சாலையில் நடந்து சென்று அதன் பின்னர் வனப்பகுதிக்குள் இறங்கி ஓடியது. இதனை கவலையாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது அவ்வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக விழிப்புடன் செல்ல வேண்டும் எனவும் யாரும் இந்த பகுதிகளில் வாகனத்தை நிறுத்தி இறங்க வேண்டாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.