சென்னையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் திருட சென்ற இடத்தில் கையும் களவுமாக திருடன் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு, அங்கிருந்து தப்பக்க முடியாமல், அந்த கொள்ளையன் முடியாமல் சிக்கி கொண்டான்.
போலீசார் வந்ததும் வீட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டு போக்கு காட்டிய நிலையில்,
தீயணைப்பு துறையினர் கிரில் கேட்டை உடைத்துக்கொண்டு, உள்ளே சென்று போலீசார் கைது செய்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பாலமுருகன் என்பதும் 10 மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அப்போது தெரிய வந்து உள்ளது.
பாலமுருகனை ஜெ. ஜெ. நகரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், வீட்டின் உரிமையாளர் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து திருடும் போது கையும் களவுமாக சிக்கி உள்ளான்.
போலீசார் வருவதை அறிந்து படுக்கை அறையில் கட்டிலுக்கு கீழே பதுங்கி இருந்த கொள்ளையன் பாலமுருகனை போலீசார், அதிரடியாக கைது செய்தனர்.
அதாவது, சென்னை ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று குற்றவாளியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.