நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் செல்வமணி(47). இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து தனது நண்பர்களுடன் சபரிமலை சென்றுள்ளார் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். மாலை படிவழிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற செல்வமணி பத்து ரூபாய் தரிசன கட்டணம் வாங்கி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரை மீட்டு திருக்கோயில் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்ககப்பட்ட செல்வமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது சபரிமலைக்கு மாலை அணிந்து சாமி தரிசனம் முடித்துவிட்டு பழனி கோவிலில் சாமிதரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.