தவறு செய்த கல்லூரிகளின் மீது மூன்று வகையான நடவடிக்கைகள் எடுக்க அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி,
– அங்கீகாரம் பெறுவதற்காக அதிக அளவில் போலியாக பேராசிரியர்களின் தகவல்களை பதிவு செய்த கல்லூரிகளுக்கு நிரந்தரமாக அங்கீகாரம் ரத்து செய்ய திட்டம்.
– தவறு செய்த கல்லூரிகளில் ஒன்றிலிருந்து மூன்று ஆண்டு வரை அங்கீகாரத்தை ரத்து செய்ய திட்டம்.
– தவறு செய்த கல்லூரிகளுக்கு அபராதம் வசூலிக்கவும் திட்டம்.
– அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளின் பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு – இன்னும் இரண்டு நாட்களில் கல்லூரியின் விவரங்கள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.
– அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற 295 கல்லூரிகளின் மீது புகார் பெரப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.
– முறைகேடு குறித்து விசாரணை செய்ய அண்ணா பல்கலைக்கழகம் சார்பிலும் குழு அமைக்கப்பட்டிருந்தது.
– முறைகேடு நடந்த கல்லூரியின் அறிக்கைகள் இன்று மாலைக்குள் பெறப்படும்.
– பெறப்படும் அறிக்கையை ஆய்வு செய்து இன்னும் இரண்டு நாட்களில் அரசிடம் சமர்பிக்கப்பட உள்ளது.
– இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் அறிக்கை தமிழக அரசிடமும் ஆளுநரிடமும் வழங்கப்பட உள்ளது.
– பின்னர், முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளுக்கு மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.