தூக்கம் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக, இளம் பருவத்தினருக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் நல்ல தூக்கம் தான் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், இந்த காலத்து இளம் பருவத்தினர் இரவில் அதிக நேரம் கேம் மற்றும் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதால், சரியாக தூங்குவதே கிடையாது.
ஃபோன் சைலண்ட் மோட் அல்லது வைப்ரேட் மோடில் இருந்தாலும், பலர் தன்னையே அறியாமல் நடு இரவில் ஃபோனை எடுத்துப் பார்க்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இதனால், அவர்களுடைய தூக்கம் சீர்குலைந்துவிடுகிறது. இப்படி தொடர்ந்து இரவில் சரியாக தூங்காமல் இருப்பது பிற்காலத்தில் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கலாம். எனவே, இரவில் நன்றாக தூக்கம் வர வேண்டுமென்றால், கீழ்க் காணும் குறிப்புகளை பின்பற்றவும்.
தூக்கத்தை மேம்படுத்த சில குறிப்புகள்:
- தூங்குவதற்கு முன் சோசியல் மீடியா பயன்படுத்துவது, வீடியோ கேம் விளையாடுவது, சாட்டிங், வீடியோ கால் செய்வது போன்றவற்றை தவிர்க்கவும்.
- தூங்குவதற்கு முன்பு பெட்டில் படுத்துக் கொண்டு டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
- நடு இரவில் எழுந்தால், தொலைபேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- பெட் ரூமில் டிவி செட் அல்லது இன்டர்நெட் இணைக்கப்பட்ட சாதனம் இருந்தால் அவற்றை மற்ற அறைக்கு மாற்றவும்.
- தூங்குவதற்கு முன்பு ஃபோனை வைப்ரேட், சைலண்ட் மோடில் போடுவதற்கு பதிலாக, முழுவதுமாக ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடவும்.