TNBudget2025: சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ள கிராம வளர்ச்சித் திட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் நகர்புறத் திட்டங்கள் என்னென்ன முக்கிய அறிவிப்புகளாக இடம் பெற்று உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் என்ன?
கிராம வளர்ச்சித் திட்டங்கள்! ஊர் வளர்ச்சித் திட்டங்கள்!
– 3,500 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டும் திட்டம்.
– முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாடு திட்டத்திற்கு ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கீடு
– ரூ.675 கோடி மதிப்பீட்டில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்
– ரூ.6,668 கோடி மதிப்பீட்டில் 7 மாவட்டங்களில் 29.74 இலட்சம் மக்கள் பயன்படும் வகையில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அமைக்கப்படும்.
– ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம். ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்
– ஒசூரில் 5 லட்சம் சதுர அடியில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்.
ஒசூர் நகரத்தை ஒட்டி ஒசூர் அறிவுசார் பெருவழித்தடமும் அமைக்கப்படும்.
– 2025-26 ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 லட்சம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.
– பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்.
– செமிகண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்கா. கோவை – சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டம்
– மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,433 கோடி ஒதுக்கீடு.
– 7 மாநகராட்சிகளில் 30 இடங்களில் தலா ரூ.5 கோடியில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்.
– சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் அறிவிப்பு. 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு.
– கலைஞர் கைவினை திட்டம் 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கீடு.
– ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் -ரூ.250 கோடி ஒதுக்கீடு.
– நடப்பாண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கத் திட்டம்.
– பழமை வாய்ந்த மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
– தமிழ்நாட்டில் மேலும் 40,000 பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்படும் என அறிவிப்பு; திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 78,882 பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
– 1,000 ஆண்டு பழமையான கோயில்களில் ₹125 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
– தனுஷ்கோடியில் பூநாரை பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்.
– மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக் காலத்தில் ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கும் திட்ம்.
– கல்வராயன் மலையில் வாழும் மக்களின் மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
– 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா.
– சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள்.
– 6,100 கி.மீ. நீள சாலைகள் அமைக்க ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கீடு.
– ஊரகப் பகுதிகளில் ஒரு லட்சம் புதிய வீடுகள்.